வேப்ப மரம்,வேப்பிலை கனவில் வந்தால் என்ன பலன்..! | Veppamaram Kanavil Vanthal Enna Palan..!

Advertisement

Veppamaram Kanavil Vanthal Enna Palan | வேப்பிலை கனவில் வந்தால்

அனைவருக்குமே தூங்கும்போது கனவு வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். ஒரு சிலருக்கு பயங்கரமான கனவு வரும்..இன்னும் ஒரு சிலருக்கு கண்ணை திறந்து பார்க்க முடியாத அளவிற்கு ஆழ்ந்த கனவு வரும். இன்னும் சிலர்க்கு தூக்கத்தில் இருந்து திடீரென விழிக்கும் அளவிற்கு கனவு வரும். இதனால், அய்யயோ இந்த கனவு பழித்துவிடுவோ என்ற பயத்திலே இருப்போம். பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால், எந்த கனவிற்கு என்ன பலன் என்பது தெரியாது.. நாம் கண்டா கனவிற்கான பலன்களை நம் வீட்டு பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம் அல்லது போனில் சேர்ச் செய்து தெரிந்துகொள்வோம். எனவே அதனை தெரிந்து கொள்ளும் வகையில் இன்றைய பதிவில் வேப்ப மரம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வேப்ப மரம் கனவில் வந்தால் என்ன பலன்..!

வேப்ப மரம் கனவில் வந்தால் என்ன பலன்

வேப்பமரம் பற்றிய பொதுவான கனவு பலன்கள்:

நீங்கள் பூஜை போன்ற காரியங்களில் அதிக ஈடுபாடுடன் இருப்பதையும், சந்தோஷமான காரியங்களில் கலந்து கொள்ள இருப்பதையும் உணர்த்துகிறது. மேலும், சில தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நல குறைவால் வீட்டில் இருக்க போவதையும் குறிக்கிறது.

வேப்பமரத்தை கனவில் கண்டால்:

நீங்கள் வேலையை பெரிய திட்டத்தை கையாள இருப்பதையும், தொழில் சார்ந்த அனைத்திலும் உங்களுக்கு நற்பெயர் கிடைக்க இருப்பதையும் உணர்த்துகிறது.

ஆமை கனவில் வந்தால் என்ன பலன்

வேப்ப இலையை பார்ப்பது போல் கனவு கண்டால்:

உங்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை சில காலம் பொறுத்துக்கொண்டு போவதையும், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் குறிக்கிறது.

மற்றொருவர் வேப்பிலையை வைத்திருப்பது போல் கனவு கண்டால்:

உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவிருப்பதையும், நீங்கள் வெற்றி பெறப்போவதையும் உணர்த்துகிறது.

தரை முழுவதும் வேப்ப இலை இருப்பதுபோல் கனவு கண்டால்:

தரை முழுவதும் வேப்ப இலை இருப்பதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்க இருக்கும் செல்வவளம் பற்றி உணர்த்துகிறது.

வேப்ப இலையை பறிப்பதுப்போல் கனவு கண்டால்:

வேப்ப இலையை இலையை பறிப்பதுப்போல் கனவு கண்டால் உங்களுக்கு உணவு பொருட்கள் அதிகமாக கிடைக்க இருப்பதையும் அதனை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement