வெற்றிலை தீபம் பலன்கள்
இன்றைய பதிவில் வெற்றிலை தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். வெற்றிலை தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் வெற்றிலையில் வீற்றிருக்கும் முருக பெருமானின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் வாழ்வில் பணக்கஷ்டம் நீங்கி, செல்வ வளம் பெருக்கவும், வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இது மட்டுமில்லாமல் நம் நாட்டில் அனைத்து நிகழ்வுகளிலும் வெற்றிலை முக்கிய இடம் பெற்றுள்ளது.
மேலும், வாரம் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி , ஞாயிற்றுக்கிழமை அன்றும் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. நினைத்த காரியம் கைகூடும். வீட்டில் உள்ள பண பிரச்சனை ஆரோக்கிய பிரச்சனை அனைத்தும் தீரும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் வாங்க…
வெற்றிலை தீபத்தின் நன்மைகள்:
அனைவருக்குமே பெரும்பாலான கஷ்டங்கள் பணத்தின் அடிப்படையில் தான் வருகின்றன. இதுமட்டுமில்லாமல் ஒருவரிடம் உள்ள பொருளாதார நிலையை பொறுத்தே அவருக்கு மதிப்பையும், மரியாதையையும் இந்த சமூகம் தருகிறது.
பண வரவை அதிகரிக்க செய்யும் கடவுளாக முருக பெருமான் விளங்குகிறார். உங்கள் வாழ்வில் பண பிரச்சனை நீங்க வெற்றிலை தீபம் ஏந்தி முருகனை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் பண கஷ்டம், கடன் பிரச்சனை போன்றவற்றை சரி செய்கிறது.
தமிழ் கடவுள் முருகனுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வெற்றிலை தீபம் ஏற்றுவதன் மூலம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் திருமணம் வரம் வேண்டுபவர்கள் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
நில பிரச்சனை, வீடு வாங்குவது மற்றும் விற்பது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலை தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகள் நடக்கும். முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று வெற்றிலை தீபம் ஏற்றுவதன் மூலம் பூமி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நிறைவேறும்.
அகல் விளக்கில் உள்ளே வெற்றிலையின் காம்பை போட்டு தீபம் ஏற்றுவதால் அதில் இருந்தும் வரும் நறுமணம் வீடு முழுவதும் நிறைந்து நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும்.
முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது எப்படி.?
வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன் செய்ய வேண்டியவை:
வெற்றிலை தீபம் ஏற்றுவதற்கு முன் பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் பன்னீர் தெளித்து சுத்தம் செய்வதன் மூலம் அதிலிருந்து வரும் வாசனை மனதை அமைதியாக வைக்கும்.
வெற்றிலை தீபம் ஏற்றும்போது நுனி இல்லாத வெற்றிலையை ஏற்றக் கூடாது. வெற்றிலையின் காம்போடு தீபம் ஏற்றக்கூடாது.
செவ்வாய்க்கிழமை அன்று முருக பெருமானை வழிபட்டால் வாழ்வில் வசந்த காலம் வீசும் என்று கூறப்படுகிறது. முருக பெருமானை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும், கார்த்திகை நாட்களிலும், சஷ்டி நாட்களிலும் வெற்றிலை தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













