வெற்றிலை மாலை ஆஞ்சநேயர்

Advertisement

வாழ்வில் வெற்றியை அடைய வெற்றிலை மாலை

பொதுவாக ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றியை அடைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். சில பேர் சொந்தமாக தொழில் செய்வார்கள், வியாபாரம் செய்வார்கள் இதில் வெற்றியை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக ஆன்மிகத்தில் ஏதும் பரிகாரம் இருந்தால் அதனை செய்தாவது வெற்றியை அடைந்திட வேண்டும் என்று நினைப்பார்கள்.

இன்றைய பதிவில் வாழ்வில் வெற்றியை அடைவதற்கு ஆஞ்சேநேயருக்கு செய்ய கூடிய மாலையை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.

வெற்றிலை மாலை ஆஞ்சநேயர்:

பொதுவாக ஒரு காரியத்தை தொடங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் இதனை ஆரம்பிக்க முடியாமல் அதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கும். இதற்கு என்ன தான் செய்வது என்று தவித்து கொண்டிருப்பீர்கள். அவர்கள எல்லாம் இந்த வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கலாம்.

ஆஞ்சிநேயருக்கு வடை மாலை எவ்வளவு சிறப்புடையதோ அந்த அளவிற்க்கு வெற்றிலை மாலையும் சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன் உகந்தது என்று கூறுகிறார்கள் அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.

இராமாயணத்தில் ராமன் சீதாவை பிரிந்திருந்த காலத்தில் அனுமன் சீதாவிடம் ராமரை பார்த்த செய்தியை கூறுகிறார். அப்போது அங்கு இருந்த வெற்றிலையை தான் அனுமனுக்கு பரிசாக கொடுத்தார். இந்த வெற்றியலையும் அனுமன் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார். இதனால் தான் அனுமனுக்கு வெற்றிலை உகந்ததாக இருக்கிறது.

வெற்றிலையை பூஜையில் எப்படி வைக்க வேண்டும் தெரியுமா

வெற்றிலை மாலை சாத்துவது எப்படி.?

வெற்றிலை மாலை ஆஞ்சநேயர்

ஆஞ்சேநேயர் கோவிலில் நீங்கள் 11 முறை சுற்றி வருவது சிறப்புடையது என்று கூறப்படுகிறது. அது போல வெற்றிலையை மாலையையும் 11, 21, 27, 54, 108 என்ற கணக்கில் கட்டி கொள்ள வேண்டும். இந்த எண்ணிக்கையில் உங்களுக்கு உகந்த வகையில் உள்ள எண்ணிக்கையில் மாலையை கட்டி கொள்ள வேண்டும்.

இந்த வெற்றிலை மாலையை சனிக்கிழமை, செவ்வாக்கிழமை, வியாழக்கிழமை போன்ற கிழமைகளில் வெற்றிலை மாலையை சாத்தலாம். முக்கியமாக அமாவாசை மற்றும் பெளணர்மி நாட்களில் வெற்றிலையை மாலையை சாத்துவது சிறந்ததாக இருக்கும்.

என்னென்ன நன்மைகள்:

இந்த வெற்றிலையை மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிப்பதால் நீங்கள் செய்யும் செயலானது வெற்றியில் வந்து முடியும். மேலும் செய்யும் செயலி; தடைகள் இருந்து கொண்டே இருந்தால் அதனையும் நிவர்த்தி செய்யும். மேலும் திருமண தடைகள் ஏதும் இருந்தால் அவை நீங்கி திருமணம் கைகூடும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

 

Advertisement