வெட்டுடையார் காளியம்மன் வரலாறு – vettudaiyar kaliamman temple history in tamil
நமது பதிவில் சிறப்பு வாய்ந்த ஆலயங்களை பற்றி அறிந்து வருகின்றோம். அதாவது அந்த ஆலையத்தின் சிறப்பு, தோற்றம், புகழ், அந்த ஆலயம் திறக்கும் நேரம், அமைந்துள்ள இடம், அங்கு நடைபெறும் திருவிழாக்கள் போன்ற முழுமையான தகவல்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது வெட்டுடையார் காளியம்மன் கோயிலின் வரலாறை பற்றியது.
தோற்றம்:
முன்னொரு காலத்தில் சிவகங்கையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கொல்லங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு பக்தருடைய கனவில் அய்யனார் தோன்றி தான் ஒரு ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூசிக்குமாறும் கூறினாராம்.
அந்த பக்தரும் மறுநாள் காலையில் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் இருந்த இடத்தில் ஒரு ஈச்சமரத்தின் அடியில் தோண்டினார். அப்போது கோடாரியால் வெட்டியதும் சிலை ஒன்று தென்பட்டதை அடுத்து அய்யனார் சிலை வெளியே எடுத்தனர். கோடாரியால் பட்ட வெட்டோடு அய்யனார் தோன்றியதால் “வெட்டுடைய அய்யனார் “ என்ற நாமத்தோடு கோவில் அமைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பண்ணாரி மாரியம்மன் கோவில் வரலாறு..!
வெட்டுடையார் காளியம்மன் தோற்றம்:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவகங்கையை ஆண்ட மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரை எதிர்த்ததால் அகிலேயரால் போர்க்களத்தில் கொல்லபட்டார். அவரது மனைவி வேலுநாச்சியார் மருது சகோதர்களின் உதவியோடு அறியாகுறச்சிக்கு தப்பி சென்றார். அதனை அறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரை தேடி சென்றனர். போகின்ற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறுத்ததால் அவளின் சிரத்தை கொய்தனர்.
இதனை அறிந்த அரசி தன் உயிரை காக்க அவள் உயிரை தியாகம் செய்த அப்பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டாள். அவளுக்கு தன் திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்து பூஜித்தார்.
அந்தப் பெண் தெய்வமே இந்த வெட்டுடையார் கோவிலில் காளிதெய்வமாக வந்து அமர்ந்தாள் என்கின்றனர். பின் நாளில் இவளே பிரசித்தம் ஆனதால் வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது.
தெய்வ சிலையின் அமைப்பு:
வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கியவாரு காளியம்மன் அருள்பாலிக்கிறாள். எட்டு திருகரத்துடன், வலது காலை மடக்கி இடது காலை அரக்கன் மீது ஊன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறாள். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்.
நீதி வழங்கும் காளியம்மன்:
இக்கோவிலில் காளி அநீதிக்கு உடனடியாக தண்டனை அளிக்கிறாள். நல்லவர்களுக்கு தீமைகளை விளைவிப்பார்கள், திருடுபவர்கள், ஏமாற்றுபவர்கள், கற்பழிபவர்கள் என எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிமானாக விளங்குகிறாள் காளியம்மன்.
மேலும் இந்த கோவிலில் காசு வெட்டி போடுதல் என்கிற வழக்கம் உள்ளது. ஒருவருடைய கோரிக்கை நியாயமானதாக இருந்து இந்த காளி தெய்வத்திடம் முறையிட்டால் நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாராம், மற்றபடி பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேர, பிள்ளைவரம் கிடைக்க, நல்ல கணவன் அமைய என அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறாள் இந்த வெட்டுடையார் காளி.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அருள்மிகு சதுரகிரி மகாலிங்கம் கோவில் வரலாறு..!
கோவில் திருவிழாக்கள்:
இந்த கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுமாம். ஆடிப் பெருக்கில் பூச்சொரிதல் நடைபெறுமாம். தினமும் அன்னதானம் நடைபெறுமாம்.
மேலும் பௌர்ணமி பூஜை, நவராத்ரி, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமை தோறும் விழாக்கள் கொண்டாடுகின்றனர்.
கோயில் அமைந்துள்ள இடம்:
- சிவகங்கை அருகே 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி.
கோயில் திறக்கப்படும்:
- காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. பௌர்ணமியில் இரவு 10 வரை திறந்திருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |