விஜயதசமி 2024 எப்போது | Vijayadashami 2024 Date and Time in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு விஜயதசமி எப்போது வருகிறது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆயுத பூஜைக்கு அடுத்ததாக கொண்டாடப்படும் விழா தான் விஜயதசமி. ஆயுத பூஜை நாளில், நம்முடைய தொழிலுக்கு உதவும் ஆயுதங்களையும், கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்து கொண்டாடுகிறோம். தொழில் சிறக்க ஆயுத பூஜை நாளை நாம் கொண்டாடுகிறோம்.
அதேபோல், கல்வி ஞானத்தை அருள்பவள் சரஸ்வதி. , ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வரும் விஜய தசமி அன்று கல்விக்கு பயன்படும் பொருட்களான புத்தகம், நோட்டு, பேனா அனைத்திற்கும் பொட்டு பூ வைத்து வழிபடுகிறோம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புதிதாக தொழில் கற்றுக்கொள்வது போன்றவற்றை செய்ய இந்த நாளை பயன்படுத்தி கொள்ளலாம். ஓகே வாருங்கள் இந்த ஆண்டு விஜய தசமி எப்போது வருகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
விஜய தசமி தேதி மற்றும் நேரம் 2024:
நல்ல நேரம்:
காலை | 10:45 AM முதல் 11:14 AM வரை |
மாலை | 04:45 PM முதல் 05:45 PM வரை |
கெளரி பஞ்சாங்க நல்ல நேரம்:
மதியம் | 12:15 PM முதல் 01:15 PM வரை |
இரவு | 09:30 PM முதல் 10:30 PM வரை |
விஜயதசமி அன்று வன்னி மரத்தை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்.
விஜயதசமி, நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளாக கொண்டாடப்படுகிறது. மேலும், இப்பண்டிகை ஆனது, வங்காளம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தசரா என்றும் அழைக்கப்படுகிறது. விஜயதசமி அன்று பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளது.
இந்தியாவில் உலகை ஆட்டி படைத்த தீயவனான மகிசாசூரனை, தேவி துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் போராடி விஜயதசமி அன்று வதம் செய்தாள். எனவே, சக்தியின் வெற்றி விழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
இராமாயணம் – இராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்தி சென்றபோது, இராவணனிடம், இராமன் சீதையை விடுவிக்குமாறு கேட்டபோது, இராவணன் மறுத்து விட்டார். இதனால் போர் செய்ய நேர்ந்தது. விஜயதசமி அன்று தான் இராமன், இராவணனை, போரில் வீழ்த்தி வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.
மகாபாரதம் – மகாபாரத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்த பாண்டவர்கள், பல வருடங்களுக்கு பிறகு, அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் அனைத்தையும் விஜயதசமி அன்று தான் பெற்றார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே, வெற்றியை அருளும் விழாவாக விஜயதசமி இருக்கிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |