விஜய தசமி வழிபாடு/ Vijaya Thasami valipadu
இன்றைய பதிவில் விஜய தசமி வழிபாடு செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்துக்கள் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக நவராத்திரி பூஜை உள்ளது. இந்த நவராத்திரி பூஜையில் துர்க்கை அம்மனுக்கு 3 நாட்கள் பூஜை செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று நாட்களுக்கு லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகின்றது. கடைசியாக சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் விஜய தசமி என்று கூறுகிறோம்.
மேலும், ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் விஜய தசமியை வழிபடுவதால் நமக்கு கல்வி ஞானம் பெருகும். கல்வி எப்படி முக்கியமோ அதே போல அவர்கள் செய்யும் தொழிலும் முக்கியமானது. இதனால் தான் குழந்தைகளை விஜயதசமி நாளில் சேர்க்கிறார்கள். இந்த பதிவில் விஜய தசமி வழிபடும் முறை பற்றி பார்க்கலாம் வாங்க…
வீட்டை சுத்தம் செய்தல்:
விஜய தசமி அன்று வீட்டை சுத்தம் செய்தும், வீட்டை துடைத்தும், நீங்கள் படிக்கும் புத்தகம் ஆகியவற்றை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.
பூஜை பொருட்கள்:
பூஜை பொருட்களான மஞ்சள், குங்குமம், பூக்கள், கற்பூரம்,வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஊதுபத்தி எண்ணெய், விளக்கு மற்றும் வீட்டில் இருக்கும் கருவிகள், புத்தகங்கள் ஆகியவற்றை பூஜை அறைக்குள் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். விஜய தசமி மற்றும் ஆயுத பூஜை என இரண்டு நாட்களும் இந்த வழிபாடு செய்யலாம்.
விஜய தசமி வழிபாடு செய்யும் முறைகள்:

- பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து விளக்கேற்றி புத்தங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- உங்கள் வீட்டில் இருக்கும் சாமி படங்கள் ,புத்தகங்கள் ஆகியவற்றிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்கள் மற்றும் மாலைகள் போட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
- கடைசியாக நைவேத்தியம் செய்த பொரிகடலை மற்றும் பிரசாதங்களை அனைவருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
விஜய தசமி பலன்கள்:
விஜயதசமி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
- விஜய தசமி வழிபாடு செய்வதன் மூலம் வெற்றி மற்றும் வாழ்க்கை மேம்படுவதற்கான தெய்வீக அருளை வழங்குகிறது.
- நாம் பயன்படுத்தும் புத்தகங்களை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு அறிவு திறன் அதிகரித்து நினைவாற்றலை மேம்படுத்தும்.
- வாழ்க்கையில் புதிய முயற்சிகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது.
- அம்பிகை மகிஷாசுரனை வென்றதை நினைத்து இந்த வழிபாடு செய்யப்படுகிறது.
- இராமாயணத்தில் ராமன் ராவணனை வென்றதற்கான அடையாளமாக இது கொண்டாடப்படுகிறது.
| இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |











