வில்லாளி வீரனே வீரமணிகண்டனே
இந்து மாதத்தில் கடவுள் வகைகளில் பல வகையான கடவுள்கள் உள்ளார்கள். ஒருவருக்கு பிள்ளையார் பிடிக்கும், ஒருவருக்கு ஐயப்பன், ஒருவருக்கு பெண் சார்ந்த கடவுள்கள் பிடிக்கும். வருடந்தோறும் கார்த்திகை 1-ந் தேதி ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது விரதத்தை ஆரம்பிப்பார்கள். அன்றைய தினம் முதல் சபரிமலை ஐயப்பனை வணங்கி பக்தர்கள் குழுவாக சேர்ந்து திருப்புகழ் பாடல்களைப் பாடுவார்கள். இவ்விரதத்தின் கடைசி நாள் ஐயப்பனை சபரிமலை சென்று வணங்குவர். இந்த விரதத்தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது அவர்கள் கடவுளை வணங்கி திருப்புகழ் படுவார்கள். இந்த பதிவில் ஐயப்பனை தரிசிக்கும் ஆன்மீகத்தவர்களுக்கு ஐயப்பனுக்கு உகந்த பாடலான வில்லாளி வீரனே வீரமணிகண்டனே பாடல் வரிகளை ( Villali Veerane lyrics in tamil) படித்து ஐயப்பனின் அருளை பெறுவோம்.
Villali Veerane Song Lyrics in Tamil:
சரணம் சொல்லிக் கூப்பிடுவோம் சபரிமலை வாசனை
வரணும் என்று அழைத்திடுவோம் வரம் கொடுக்கும் ஈசனை
அருளைத் தரும் ஆண்டவனை அன்பருக்கு மித்திரனை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் ஹரிஹர சுதன் ஐயப்பனை
வில்லாளி வீரனே வீரமணிகண்டனே தமிழ்
சொல்லெடுத்துப் பாடுவோம் சுந்தரேசர் மைந்தனை
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா ||
சபரிமலை செல்பவர்க்கு சஞ்சலங்கள் இல்லை
பயம் தனையே போக்கிடுவான் பந்தளத்தின் பிள்ளை
அபயம் என்று சரணடைந்தால் அகன்றிடும் தொல்லை
அவனின்றி அவனியிலே அணூவும் அசைவதில்லை
வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு எருமேலிப்
பேட்டை செல்லுவோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
சாமி திந்தக்கதோம் ஐயப்பா திந்தக்கதோம்
ஐயப்பா திந்தக்கதோம் சாமி திந்தக்கதோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
கோட்டைக் காவலன் வாவரு சாமியை
கொண்டாடி மகிழ்வோம்
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |