வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார முருகன் கோயில் ஒரே இடத்திலா.! எங்குள்ளது?

Updated On: April 7, 2025 1:19 PM
Follow Us:
vilvarani murugan temple
---Advertisement---
Advertisement

வில்வாரணி முருகன் கோவில் | திருவண்ணாமலை வில்வாரணி முருகன் கோவில்

இந்துக்கள் சம்பிரதாயத்தில் நிறைய கடவுள்கள் இருக்கிறது. அதில் எல்லாருக்கும் எல்லா கடவுளையும் பிடிக்குமா என்று கேட்டால் இல்லை. ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அப்படி வணங்கும் கடவுள்களில் முருகனும் ஒருவர். இவர் நிறைய இடத்தில் சூழ்திருக்கிறார். ஆனால் நமக்கு தெரிந்தது எல்லாம் அறுபடை வீடுகள் தான் தெரியும். உங்களுக்கு தெரியாத முருகன் கோவில் தான் வில்வாரணி முருகன்  கோவில். இந்த கோவில் ஆனது திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்த தளமானது 27 நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தளமாக இருக்கிறது. மேலும் இந்த கோவில் ஆனது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. இந்த கோவிலை பற்றிய முழு தகவலை பற்றி இந்த பதிவின் மூலம் அறிந்த கொள்வோம் வாங்க..

கோவில் வரலாறு:

இந்த கோவில் ஆனது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இந்த கோவில் பற்றிய சிறப்பாக கூறியுள்ளது. வேல் விளையாட்டில் வல்லவனாம், இவர் எய்த் அம்பு ஆனது வாழைப்பந்தலிருந்து பருவதமலை மீது எய்தார். அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. இதன் மூலம் இவரது இரத்தம் ஆனது ஆறாக பெருக்கெடுத்து, மலையில் இருந்து வழிந்தது. இதனால் இந்த ஆற்றுக்கு செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.

Vilvarani murugan temple location

இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்வதி தேவி கூறினார்கள்.

செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நடுப்பழனி முருகன் கோவில் பற்றி தெரியுமா

இன்று வரையிலுமே முருகன் வழிபட்ட இடங்களில் சிவன் ஆலயங்கள் இருக்கிறது. இந்த 14 சிவன் ஆலயங்களிலும் சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இவர்கள் இருவரும் ஆடிக்கிருத்திகை அன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார்கள். இவர்களால் ஒரு வருடம் ஆடிக்கிருத்திகை அன்று முருகனை சென்று தரிசனம் செய்ய முடியவில்லை என்று கவலை அடைந்தார்கள். இதனை அறிந்த முருகன் கனவில் வந்து, நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன், இருக்கும் வரை 27 நட்சத்திரக்காரர்களும் என்னை தரிசனம் செய்கிறார்கள்.  அதனால் நட்சத்திர மழையின் அடிவாரத்தில் இருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து காணுங்கள் என்று கனவில் வந்து கூறினார்.

இதன் மூலம் சிவாச்சாரியார்கள் அதிகாலை என்னும் பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான்காட்சி தந்தார்.

என்னென்ன விழாக்கள்:

சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை போன்றவை விஷேசமாக இருக்கும்.

கிருத்திகை நாட்களில் நட்சத்திரகிரியை சுற்றி வருவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கோவில் நடை திறக்கும் நேரம்:

காலை 08:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

மாலை 04:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை

கோவில் முகவரி:

நட்சத்திர கிரி முருகன் கோவில், செங்கம், வில்வாரணி, தமிழ்நாடு 606906.

வில்வரணி முருகன் கோயில் போளூர்-செங்கம் பாதையில் அமைந்துள்ளது. வேலூர் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து முறையே 45 கி.மீ மற்றும் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போளூரிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

என்ன தோஷம் நீங்கும்:

இந்த கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் நட்சத்திர தோஷம் நீங்கும். இந்த தோஷ நீங்குவதற்கு பால் அபிஷேகம் செய்து,விருட்சி பூக்களால் அலங்கரித்து, மாதுளை பழம் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நட்சத்த்திர தோஷங்கள் நீங்கும்.

குழந்தை வரம் தரும் பழனி முருகன் கோவில் தங்கத்தேர் வழிபாடு

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now