விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் நேரம் | Vinayagar Chaturthi 2023 Date Tamil Nadu

vinayagar chaturthi 2023 date tamil nadu

Vinayagar Chaturthi 2023 Date Tamil Nadu

பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் ஏதோ ஒரு கடவுளை நிச்சயமாக வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது முழுமுதற் கடவுளாக இருக்க கூடியவர் விநாயகர். அதுமட்டுமில்லாமல் நாம் எந்த செயலை ஆரம்பிப்பதற்கு முன் விநாயகரை வழிப்பட்டு விட்டு தான் ஆரம்பிப்போம். ஏனென்றால் நமது செயலில் எந்த பிரச்சனையும் இலலாமல் நல்லபடியாக முடிய வேண்டுமென்று வணங்கி வழிபடுவோம்.

அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி என்பது வருடத்தில் ஒரு நாள் வர கூடியது. இந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவோம். வீடுகளில் களிமண்ணால் ஆன சிலைகளை வாங்கி பலரும் வணங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். கிராமப்புறங்களில் சிறுவர்கள் அல்லது அந்தந்த பகுதி இளைஞர்கள் விநாயகர் வாங்கி வந்து வீதிகளில் உலா வருகின்றனர். ஆக இந்த நாள் வரும் தேதி, நேரம் போன்றவற்றை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் நேரம்:

விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் நேரம்

2023-ம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ம் தேதி வருகின்ற திங்கட்கிழமை வருகின்றது.

சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18-ம் தேதி திங்கட்கிழமை காலை 11.39 மணிக்கு தொடங்கி , செப்டம்பர் 19 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 11.50 வரை உள்ளது.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் பற்றி தெரியுமா..?

விநாயகர் பூஜை செய்யும் நேரம்:

விநாயகர் சதுர்த்தி பூஜை மாலையில் செய்வதே சிறந்த ஒன்றாக இருக்கிறது. மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும் என்பதே வழக்கம். இதை வைத்து பார்க்கும் போது செப்டம்பர் 19-ம் தேதி வரை மட்டுமே சதுர்த்தி திதி இருக்கிறது, அதன் பிறகு பஞ்சமி திதி வந்து விடுகிறது.

செப்டம்பர் 18-ம் தேதி சதுர்த்தி திதி காலை 11.39 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 11.50 வரைக்கும் தான் உள்ளது. அதனால் நாம் செப்டம்பர் 18-ம் தேதியில் விநாயகர் சதுதிர்த்தியை கொண்டாட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி பழங்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்