விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ.!

Advertisement

Vinayagar Chaturthi 2024 Date in Tamil | விநாயகர் சதுர்த்தி 2024 தேதி 

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டு 2024 விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது.? வழிபடுவதற்கு உகந்த நேரம் எப்போது.?  என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். விநாயகர் சதுர்த்தி ஆனது, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் குழந்தையான விநாயக பெருமானின் பிறப்பினை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் மிக முக்கியமான விழாக்களில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும்.

இந்நாளில் விநாயகரின் உருவச்சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து பூஜை செய்து நீர் நிலைகளில் கரைப்பார்கள். விநாயகர் சதுர்த்தி ஆனது, ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி எப்போது கொண்டாடப்படுகிறது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

Vinayagar Chaturthi 2024 Date and Time in Tamil:

விநாயகர் சதுர்த்தி 2024 தேதி

இந்த ஆண்டு 2024 விநாயகர் சதுர்த்தி செப்டெம்பர் மாதம் 07 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.

சதுர்த்தி திதி ஆனது செப்டம்பர் 06 ஆம் தேதி அன்று மதியம் 03:01 PM மணிக்குத் தொடங்கி மறுநாள் செப்டம்பர் 07 ஆம் தேதி  மாலை 05:37 PM  மணிக்கு முடிவடைகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று, பிள்ளையார் சிலையை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா..?

Vinayagar Chaturthi 2024 Tamil Date:

விநாயகர் சதுர்த்தி தமிழ் தேதிக்கு ஆவணி 22 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம்:

செப்டெம்பர் 07 ஆம் தேதி காலை 11:03 AM முதல் மதியம் 01:34 PM வரை பூஜைகளை செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆனது மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற இந்தியாவின் சில பகுதிகளில் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் புதிதாக விநாயகர் சிலை வாங்கி வந்தோ அல்லது களிமண்ணால் செய்தோ அவற்றிக்கு பூ, மாலை, அருகம்புல் மாலை அணிவித்து கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படைத்து பூஜை செய்வார்கள். அதன் பிறகு, விநாயகர் சிலையில் ஊர்வலமாக எடுத்து வந்து, அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வழிபாடு செய்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்று வாசலில் போட வேண்டிய கோலங்கள்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement