விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் பற்றி தெரியுமா..?

vinayagar chaturthi valipadu in tamil

Vinayagar Chaturthi Valipadu in Tamil

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கடவுள் வழிபாடு என்பது இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த கடவுளை வழிபடுவதற்கு முன்பாகவும், விநாயகர் பெருமாளை வழிப்படுவது என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவராகவும் விளங்கக்கூடியவர் விநாயகர் தான். மேலும் விநாயகருக்கு கணபதி, கணேஷ் என்ற இதர பெயர்களும் இருக்கிறது. இவ்வளவு பண்புகளை கொண்டுள்ள கணபதிக்கு உகந்த நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டப்படுகிறது. ஆகையால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாம் சரியான முறையில் வழிபட்டு வருவதன் மூலம் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி ,மகிழ்ச்சி ஏற்படும். ஆகவே 2023-ஆம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

விநாயகர் சதுர்த்தி பழங்கள்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு:

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்த விநாயகர் வீட்டிலேயே செய்து அல்லது கடைகளில் வாங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த விநாயகருக்கு போட்டு மற்றும் பூ வைத்து விடுங்கள்.

ஒருவேளை உங்களால் களி மண்ணால்  விநாயகரை செய்ய முடியவில்லை என்றால் மஞ்சளால் கூட விநாயகரை செய்து கொள்ளலாம்.

 விநாயகர் சதுர்த்தி வழிபாடு

அதன் பிறகு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சிய பால், சுண்டல், அப்பம் மற்றும் சர்க்கரை பொங்கல் என இவை அனைத்தினையும் செய்து வழிபடலாம்.

அதோடு தேங்காய், வாழைப்பழம், வெற்றி மற்றும் பாக்கு என இதனையும் வைத்து விட வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் எதை வேண்டுமானாலும் செய்து வழிபடலாம்.

 விநாயகர் பூஜை செய்யும் முறை

மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று அருகம்புல் மற்றும் எருக்கம் பூ இருந்தாலும் வைத்து வழிபடலாம். கடைசியாக இத்தகைய பொருட்களை எல்லாம் செய்த முடித்த பிறகு சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

இத்தகைய பூஜை வழிபாட்டிற்கு பிறகு 3 நாட்கள் கழித்த பிறகு மஞ்சள் அல்லது களிமண்ணால் செய்த விநாயகரை நீரில் கரைத்து விடுங்கள். இவ்வாறு வழிபடுவதன் மனம் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நல்ல வழி உண்டாகும் என்பது ஐதீகமாக இருக்கிறது.

தினமும் சொல்லக்கூடிய விநாயகர் மந்திரம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்