விநாயகர் கனவில் வந்தால்
மனிதர்களுக்கு இரவு தூங்கும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது ஏற்படுவது தான் கனவு. இந்த கனவை ஒரு சிலர் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் ஞாபகம் வைத்து கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் தாம் கண்டா கனவுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிலர் அதை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் கனவு என்பது எதிர்காலத்தில் நடக்க கூடிய ஒன்றை முன்னரே அறிவிப்பதாக ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இன்றைய பதிவில் விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
விநாயகர் கனவில் வந்தால் என்ன அர்த்தம்:

விநாயகர் சிவபெருமான் மற்றும் பார்வதி இருவரின் மகன். இவரை முழுமுதற் கடவுள் என்று அழைக்கிறார்கள். உங்களது கனவில் விநாயகர் வந்தால் நல்லது. எப்படியென்றால் இவர் விக்னஹா்த்தா ஆவார். விக்னஹா்த்தா என்றால் தடைகளை அழிக்க கூடியவர். அதனால் தான் இந்துக்கள் எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபட்டு தொடங்குவார்கள்.
உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..!
நீங்கள் விநாயகரை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் புதிதாக தொழில் தொடங்குவீர்கள், அல்லது புதிதாக வேலை கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
விநாயகரை சுக்கார்த்தா என்று அழைக்கப்படுகிறார். சுக்கார்த்தா என்றால் நன்மை மற்றும் மகிழ்ச்சியை தர கூடியவர் என்று பொருள். அதனால் விநாயகரை கனவில் கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை குறிக்கிறது.
நாம் ஏதவாது ஒரு செயலை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருப்போம், ஆனால் அந்த செயலை செய்ய மறந்திருப்போம். அதனால் அதனை ஞாபக படுத்தும் வகையில் விநாயகர் கனவில் வருகிறார்.
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்?
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













