வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கொழுக்கட்டையில் இந்த தவறை செய்து விடாதீர்கள். விநாயகர் அருள் கிடைக்காது!

Updated On: August 25, 2025 12:08 PM
Follow Us:
vinayagar sathurthi kolukattai valipadu
---Advertisement---
Advertisement

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை | Vinayakar sathurthi kolukatai valipadu

விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை தான் நினைவிற்கு வரும். இந்த பலகாரமானது விநாயகருக்கு ரொம்ப பிடித்த உணவாக இருக்கிறது. அதனால் இதனை செய்யும் போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இதில் ஆன்மீக ரீதியாக சில தவறுகளை செய்ய கூடாது என்று இருக்கிறது. 

கொழுக்கட்டை செய்யும் போது இந்த தவறுகளை செய்தால் விநாயகரின் அருள் ஆனது கிடைக்காமல் போகிவிடும். அதனால் இந்த பதிவில் அவை என்னென்ன தவறுகள் என்று அறிந்து கொண்டு அந்த தவறுகளை செய்யாமல் விநாயகரை வழிபடுங்கள். 

கொழுக்கட்டை செய்யும் போது செய்ய கூடாதவை:

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி அன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் அன்றைய நாள் வெளியே செல்வீர்கள். இதற்காக சில பேர் என்ன செய்வார்கள். முதல் நாளே பூரணத்தை செய்து பிர்ஜில் வைப்பார்கள். இது போல மட்டும் செய்து விடாதீர்கள். இது பெரிய தவறு. விநாயகர் சதுர்த்தி அன்று தான் குளித்து விட்டு பூரணம் செய்து. கொழுக்கட்டை செய்ய வேண்டும். கொழுக்கட்டையை கடைமைக்கு என்று செய்ய கூடாது. அதனுடைய வடிவமும் மாற கூடாது. சுத்தமான முறையில் கொழுக்கட்டை செய்ய வேண்டும். விநாயகருக்கு படைப்பதற்கு முன்னடி நீங்க சாப்பிட கூடாது. கொழுக்கட்டை அதிகமாக செய்து வீணடிக்க கூடாது. உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவிற்கு மட்டும் கொழுக்கட்டை செய்யுங்கள்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் பற்றி தெரியுமா..?

 

வீட்டில் கொழுக்கட்டை செய்யும் போது செய்ய கூடாது தவறு

நீங்கள் விநாயகருக்கு செய்ய கூடிய கொழுக்கட்டையை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். மனதில் கோபம், கெட்ட எண்ணம் இருக்க கூடாது. மனதை அமைதியாக வைத்து பக்தியுடன் செய்ய வேண்டும். அழுது கொண்டே கொழுக்கட்டை செய்ய கூடாது. கொழுக்கட்டையில் சேர்க்க கூடிய பொருட்கள் ஆனது பழைய பொருட்களாக இருக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் ரொம்ப நாட்களுக்கு முன்னடி வாங்கி வைத்திருப்பீர்கள், அதிலிருந்து நாற்றம் வரக்கூடும். அதனால் புதிதாக  பொருட்களை வாங்கி கொழுக்கட்டை செய்வது நல்லது. கொழுக்கட்டை செய்வதற்கு நேரம் குறைவாக இருக்கிறது என்று அவசரம் அவசரமாக செய்ய கூடாது. சமைக்கும் இடம் மற்றும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த வீடியோவில் கூறியுள்ள தவறுகளை செய்யாமல் கொழுக்கட்டை செய்து விநாயகரை வழிபடுங்கள். விநாயகரின் அருள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் விநாயகர் அருள் கிடைக்கும்.

கொழுக்கட்டை வழிபாடு:

மேல் கூறியுள்ள முறையில் செய்து கொழுக்கட்டையை செய்து எச்சில் படாமல் கொழுக்கட்டையை விநாயகருக்கு படைக்க வேண்டும். எச்சில் படாமல் என்றவுடன் சாப்பிடாமல் வைக்க வேண்டும் என்று மட்டும் அர்த்தம் கிடையாது. நீங்கள் கொழுக்கட்டையை எடுத்து வரும் போது கூட பேசாமல் எடுத்து வர வேண்டும். அதாவது நீங்கள் பேசும் போது கூட எச்சில் கொழுக்கட்டையில் பட கூடாது. 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now