எந்தெந்த வேண்டுதலுக்கு எத்தனை தேங்காய் காணிக்கை
கோவிலுக்கு சென்றாலே நம்முடைய கஷ்டம் மற்றும் குறைகளை கூறி புலம்புவோம். அதனோடு இந்த பிரச்சனையை சரி செய்தால் உனக்கு அபிஷேகம் செய்கிறேன், அல்லது 101 தேங்காய் உடைக்கிறேன் என்றெல்லாம் கூறுவார்கள். ஒவ்வொரு கடவுளுக்கு ஏற்றது போல வேண்டுதல் மாறுபடும். எடுத்துக்காட்டிற்கு வீரனார் என்றால் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பார்கள். அது போல நிறைய பேர் தேங்காய் வேண்டுதல் தான் வேண்டி கொள்வார்கள். இந்த தேங்காய் வேண்டுதல் ஆனது ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்ப மாறுபடும். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
விநாயகருக்கு தேங்காய்
சில பேருக்கு திருமணம் தள்ளி போகி கொண்டே இருக்கும், இதனால் கோவில் கோவிலாக சென்று வேண்டி கொள்வார்கள். இப்படி நீங்கள் வேண்டி கொள்வதோடு மட்டுமில்லாமல் 11 தேங்காய் உடைக்க வேண்டும்.
திருமணம் நடந்த பிறகு அந்த தம்பதிகளிடம் எல்லாரும் கேட்பது ஏதும் நல்ல செய்தி இல்லையா என்று கேட்பார்கள். சில பேருக்கு அந்த பாக்கியம் உடனே கிடைத்து விடும். சில பேருக்கு வருடங்கள் ஆனாலும் கிடைப்பதில்லை. அதனால் குழந்தை பேறு கிடைப்பதற்கு 9 தேங்காய் உடைக்க வேண்டும்.
எவ்வளவு தான் சம்பளம் வாங்கினாலும் அன்றைய நாள் செலவுகளுக்கும் சரியாகிவிடுகிறது என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கடன் பிரச்சனை என்பது அனைவரும் சந்திக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இதனை சரி செய்வதற்கு 7 தேங்காய்களை உடைக்க வேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்குவதற்கு 5 தேங்காய்களை உடைக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு 3 காய்களை உடைக்க வேண்டும்.
தொழில் செய்பவராக இருந்தால் அதில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் நினைப்பீர்கள். அதற்கு நீங்கள் 3 காய்களை உடைக்க வேண்டும்.
நன்றாக படித்திருப்பீர்கள், ஆனால் படிப்பிற்கேற்ற வேலை இல்லை என்று தவித்து கொண்டிருப்பீர்கள். அதற்கு கடவுளுக்கு 3 தேங்காய்களை உடைக்க வேண்டும்.
எப்போது தேங்காய் உடைக்க வேண்டும்:
வேண்டுதலுக்கான தேங்காய்களை மாதம் ஒரு முறை உடைக்க வேண்டும், அதுவே உங்களுக்கு விரைவாக பலனை பெற வேண்டுமென்றால் வாரம் ஒரு முறை தேங்காயை உடைக்க வேண்டும். அதுவும் இந்த தேங்காய்களை அரசமரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு உடைப்பது மிகவும் சிறந்தது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |