வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விநாயகரை வழிபடும் முறை..! | Vinayagar Valipadu Murai

Updated On: August 25, 2025 7:15 PM
Follow Us:
vinayagar valipadu murai in tamil
---Advertisement---
Advertisement

Vinayagar Valipadu Murai in Tamil | விநாயகரை வழிபடும் முறை

அனைவர்க்கும் பிடித்த கடவுள் வரிசையில் முதலில் இருப்பது கடவுள் பிள்ளையார் தான். தடைகளை நீக்கி வரங்களை அளிப்பவர் பிள்ளையார். இதனால் தான் நாம் பெரும்பாலான நேரங்களில் நாம் பிள்ளையாரப்பா என்று கூறுவோம். பிள்ளையாரை வழிபாடும் முறை மிகவும் எளியது. ஆனால், அதனால் கிடைக்கும் பலனோ மிகப்பெரியது. அந்த வகையில் இப்பதிவில் முழுமுதற்கடவுளான விநாயக பெருமானை வழிபடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சில நேரங்களில் நமக்கு எடுத்த காரியம் அனைத்தும் தடைபட்டு கொண்டே இருக்கும். பிறருக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய ஓன்று நமக்கு கடின உழைப்பு மற்றும் பல தடைகளை கடந்து கிடைக்கும். எனவே, அப்படி இருக்கும்பட்சத்தில் விநாயகரை தொடர்ந்து வழிபாடு செய்து வருவதன் மூலம் தடைகளை நீக்கி வரங்களை அளிப்பார் விநாயகப்பெருமான்.

விநாயகரை வழிபடும் முறை:

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபடுவதற்கு உகந்த நாள். ஆகையால், இந்த இரண்டு நாட்கள் விநாயகரை வழிபட மறக்காதீர்கள். அதனால், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அன்று மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்கு குங்குமம் இட்டு அருகம்புல் சூட்டி ஒரு பித்தளை தாம்பூல தட்டில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு, விநாயகருக்கு ஏற்ற எருக்கம் பூ மாலை கட்டி விநாயகருக்கு போடுங்கள். பிள்ளையார் சிலைக்கு முன்னால் ஒரு அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி வெள்ளருக்கு திரி போட்டு விநாயகர் பாடலை உச்சரித்து வழிபடுங்கள்.

விநாயகரை வழிபடும் முறை

விநாயகர் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்.?

விநாயகரை வணங்கும் முறை:

விநாயகரை வணங்கும்போது தலையில் கொட்டி கொண்டும் தோப்பு காரணம் போட்டும் வழிபட வேண்டும். அதாவது, தனது இரு கைகளில் வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் 3 முறை குட்டி அதன் பிறகு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.

விநாயகரை எத்தனை முறை வலம் வரவேண்டும்:

விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வழிபட்டுவிட்டு விநாயகரை ஒரு முறை சுற்றி வளம் வர வேண்டும்.

விநாயகருக்கு இருக்கக்கூடிய விரதங்கள்:

1. வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்

விநாயகர் நிவேதனம்:

 vinayagar valipadu eppadi tamil

விநாயகருக்கு கொழுக்கட்டை, கரும்பு, அவல், பொரி ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும்.

ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now