விபரீத ராஜயோகம் என்றால் என்ன.?
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நாளில் தங்களின் இடத்தை மாற்றி கொள்ளும். இந்த மாற்றமானது எல்லா ராசியிலும் காணப்படும். இருந்தால் சில ராசிகளுக்கு மட்டுமே நற்பலன்களை கொடுக்கும். 50 வருடத்திற்கு பிறகு விபரீத ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வர போகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
விபரீத ராஜயோகம் என்றால் என்ன.?
ஜோதிடத்தில் கிரகங்களில் அமைப்பு நன்றாக இருந்தால் ராஜயோகம் ஏற்படுகிறது. விபரீதம் என்பது எதிர்ப்பார்க்காத அளவிற்கு ஆண்டியாக இருப்பவனை கூட அரசனாக்க கூடியது தான் விபரீத ராஜயோகம்.
விபரீத ராஜயோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்:
மகர ராசி:
மகர ராசிகாரர்களுக்கு விபரீத ராஜயோகம் நற்பலன்களை தர போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு நீச்சபங்கு ராஜயோகம், தன ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் மகர ராசிக்காரர்கள் எந்த செயலை செய்தாலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். மேலும் பணியிடத்தில் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வரன் ஏதும் கிடைக்கவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வரன் அமையும்.
துலாம் ராசி:
மீனா ராசியில் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளி தர போகிறது. பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். ஏதேனும் நீங்கள் கடன் கொடுத்திருந்தால் அந்த கடன் தொகையானது கைக்கு கிடைக்கும். இந்த கால கட்டத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். மேலும் லாபககரமானதாகவும் இருக்கும்.
ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு எட்டாவது வீட்டில் புதன் மற்றும் வியாழன் மூன்றாவது வீட்டில் வீனஸ் உள்ளார். இதனால் நீங்கள் எந்த செயல் செய்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு பிடித்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதை நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக அதில் வெற்றியை அடையலாம்.
மேஷம் ராசி:
மேஷ ராசியினருக்கு விபரீத ராஜயோகத்தால் மங்களகரமானதாக இருக்கிறது. 12-ம் வீட்டில் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இதனால் உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும். படிக்கும் மாணவர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |