விரதங்களும் பலன்களும் | Viratham Palangal in Tamil

Viratham Palangal in Tamil

விரதம் இருப்பது எப்படி | Viratham Irukum Murai in Tamil

விரதமும் பலன்களும்/ Viratham Palangal in Tamil: ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் என்னென்ன விரதங்கள் உள்ளன, அவற்றை எப்படி எடுக்க வேண்டும், விரதங்கள் எடுப்பதால் என்னென்ன பலன்கள் உள்ளன என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்ளுவோம். விரதங்களில் ஏராளமான வகை விரத வழிபாடுகள் உள்ளன. விரதம் என்பது உணவு உட்கொள்ளாமல் அந்தந்த விசேஷ நாளில் (விரதம் இருக்கும் நாட்கள்) உரிய கடவுளுக்கான வழிபாடுகளை செய்வது தான். சரி இப்போது விரதம் மற்றும் அதன் பலன்களை படித்தறியலாம்.

மார்கழி திருவாதிரை விரதம் 2021

விரதம் என்றால் என்ன:

viratham palangal: விரதம் என்பது இந்து சமயங்களில் உணவு உண்ணாமல் இருப்பதல்ல..! உணவினை சுருக்குதல் என பொருள். நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையதாகும். விரதமானது இந்து மதத்தில் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள், கிறித்தவ மதத்தை சார்ந்தவர்களும் பல விரதங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

உபவாசம் என்பது இறைவனுடைய பெயரை மனதில் நினைத்து அவனருகே வசித்தல் என்றும், இறைவனை மனதில் நினைத்து தியானம் செய்து, பல நாள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதே உபவாசம் ஆகும். விரதம் என்பது விசேஷ நாட்களில் இஷ்ட கடவுளை மனதில் நினைத்து ஐம்புலன்களை அடக்கி உணவு உட்கொள்ளாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் மேற்கொள்வதால் (viratham benefits in tamil) மனம், புத்தி, உடல் முழுவதும் தூய்மை அடையும் என்பது நம் முன்னோர்கள் கூறி வைத்ததாகும்.

விரதமும் பலன்களும் | விரதங்களும் பலன்களும்:

சோமவார விரதம்:

சோமவார விரதம்

நாள் : கார்த்திகை மாத திங்கள் கிழமைகள்
தெய்வம் : சிவபெருமான்
சோமவார விரதம் இருக்கும் முறை: சோமவார விரதம் இருப்பவர்கள் இரவு உணவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை முடியாதவர்கள் மட்டும் காலை உணவு எடுத்துக்கொள்ளலாம்.
சோமவார விரதம் பலன்கள்: திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வழிபாடு: கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிவாலயம் சென்று வந்தால் நல்லது.

பிரதோஷ விரதம்:

பிரதோஷ விரதம்

நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
பிரதோஷ விரதம் இருக்கும் முறை: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகல் நேரங்களில் எதையும் உண்ணுதல் கூடாது. மாலை 04:30 மணி அளவில் தலை நீராடி சிவாலயம் சென்று சிவனை வழிபட்டு, பிரதோஷ நேரம் முடிந்ததும் சிவன் அடியார்களுடன் சேர்ந்து உன்ன வேண்டும்.
பிரதோஷ விரதம் பலன்கள் (viratham palangal): கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை முற்றிலும் நீங்கும். செய்த பாவம் அனைத்தும் நீங்கும்.
செய்யக்கூடாதவை: பிரதோஷ விரதம் கடைப்பிடிக்கும் நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், எண்ணெய் தேய்த்தல்,  பயணம் செய்தல், மந்திர ஜபம் செய்தல் ஆகியவை கூடாது.

சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை..!

சித்ரா பவுர்ணமி விரதம்:

சித்ரா பவுர்ணமி விரதம்

நாள்: சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
தெய்வம்: சித்திரகுப்தர்
சித்ரா பவுர்ணமி விரதம் இருக்கும் முறை (viratham irukum murai in tamil): சித்ரா பவுர்ணமி விரதத்தில் இரவில் மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சித்ரா பவுர்ணமி விரதம் பலன்கள்: மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

தை அமாவாசை விரதம்:

தை அமாவாசை விரதம்

நாள்: தை அமாவாசை
தெய்வம்: சிவபெருமான்
தை அமாவாசை விரதம் இருக்கும் முறை: காலையில் உணவு சாப்பிடாமல் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல்.
தை அமாவாசை விரதம் பலன்கள்: முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி.
வழிபாடு: பிற அமாவாசைகளில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தை அமாவாசையில் முன்னோர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

கந்த சஷ்டி விரதம்:

Viratham Palangal in Tamil

நாள்: ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள்.
தெய்வம்: சுப்பிரமணியர்
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை: முதல் 5 நாட்கள் வரையிலும் ஒரு வேலை மட்டும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசி நாள் முழுமையாக பட்டினி கிடந்து, சூரசம்ஹாரம் முடிந்த பிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பிறகு, மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை அருந்தி வரலாம்.
கந்த சஷ்டி விரதம் பலன்கள்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மங்களவார விரதம்:

மங்களவார விரதம்

நாள்: தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய் கிழமைகளில் விரதம் கடைப்பிடித்தல்.
தெய்வம்: பைரவர், வீரபத்திரர்
மங்களவார விரதம் இருக்கும் முறை: மங்களவார விரதம் இருக்கும் போது பகல் நேரத்தில் ஒரு நேரம் உணவு உட்கொள்ளலாம். 
மங்களவார விரதம் பலன்கள்: வெளியில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு கிடைக்கும், மனதில் உள்ள பயம் நீங்கும்.

உமா மகேஸ்வர விரதம்:

உமா மகேஸ்வர விரதம்

நாள்: கார்த்திகை மாத பவுர்ணமி.
தெய்வம்: பார்வதி, பரமசிவன்
உமா மகேஸ்வர விரதம் இருக்கும் முறை: உமா மகேஸ்வர விரதம் இருக்கும் போது காலையில் மட்டும் உணவு உட்கொள்ளலாம். 
உமா மகேஸ்வர விரதம் பலன்கள்: குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவு நீங்கி  ஒற்றுமை நிலவும்.

விநாயக சுக்ரவார விரதம்:

விநாயக சுக்ரவார விரதம்

நாள்: வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி வாழ்நாள் முழுவதும் விரதத்தை கடைபிடிக்கலாம்.
தெய்வம்: விநாயகர் 
விநாயக சுக்ரவார விரதம் இருக்கும் முறை: விநாயக சுக்ரவார விரதம் இருக்கும் போது பகலில் பட்டினி இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம்.
விநாயக சுக்ரவார விரதம் பலன்கள்: கல்வி அபிவிருத்தி

கல்யாண சுந்தர விரதம்:

கல்யாண சுந்தர விரதம்

நாள்: பங்குனி உத்திரம்
தெய்வம்: கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
கல்யாண சுந்தர விரதம் இருக்கும் முறை: கல்யாண சுந்தர விரதம் இருக்கும் போது இரவில் உணவு சாப்பிடலாம்.
விநாயக சுக்ரவார விரதம் பலன்கள்: நல்ல வாழ்க்கை துணை அமையும்.

சூல விரதம்:

சூல விரதம்

நாள்: தை அமாவாசை
தெய்வம்:சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
சூல விரதம் இருக்கும் முறை: சூல விரதம் இருக்கும் போது இரவில் மட்டும் உணவு சாப்பிடக்கூடாது, காலை நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். 
சூல விரதம் பலன்கள்: விளையாட்டில் திறமை அதிகரிக்கும்.

இடப விரதம்:

இடப விரதம்

நாள்: வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம்: ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
இடப விரதம் இருக்கும் முறை: பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
இடப விரதம் பலன்கள்: குடும்பத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்.

முருகன் சுக்ரவார விரதம்:

முருகன் சுக்ரவார விரதம்

நாள்: ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம்: சுப்ரமணியர்
முருகன் சுக்ரவார விரதம் இருக்கும் முறை:பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
முருகன் சுக்ரவார விரதம் பலன்கள்: துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.

சுக்கிரவார விரதம்:

சுக்கிரவார விரதம்

நாள்: சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிர வாரம் தொடங்கி (வெள்ளிக்கிழமை) பிரதி சுக்கிர வாரமும் உமா தேவியாரை முன்னிட்டு அனுஷ்டிக்கும் விரதம் சுக்கிர வார விரதம் எனப்படும்.
தெய்வம்: அம்பாள்
சுக்கிரவார விரதம் இருக்கும் முறை: பகலில் ஒருபொழுது உணவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முருகன் சுக்ரவார விரதம் பலன்கள்: வாழ்க்கையில் அனைத்து சகல பாக்கியமும் கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்