விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள்

Advertisement

விருச்சிக ராசி பலன்கள்

வணக்கம் பொதுநலம்.காமின் இனிமையான நேயர்களே. இன்று ஆன்மிகம் பதிவில் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த நபர்களின் வாழ்க்கை பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதில் அதை பற்றி தெரிந்துகொள்வோம். எல்லோருக்கும் ஒரு ராசி அதுபோல ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நட்சத்திரம் கண்டிப்பாக இருக்கும். அதன்படி இன்று நாம் விருச்சிக ராசிகாரர்களின் வாழ்க்கை பலன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்:

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரக்காரர்களே. இந்த ஆண்டு பிரயாணத்தில் சில தடங்கல்கள் ஏற்படும் ஆண்டாக உள்ளது. நீங்கள் நினைத்த அல்லது திட்டமிட்ட காரியங்கள் நடக்காமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. தேவையில்லாத பிரச்சனைகள், வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியமாக இருந்தாலும் பல சிக்கல்களுக்கு பிறகே அந்த வேலையை செய்து முடிக்கமுடியும்.

மிதுன ராசி பொதுவான குணங்கள்

 

வாகனங்களின் மூலம் சரியான அளவு லாபம் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். வியாபாரிகளாகிய உங்களுக்கு உங்கள் தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி அதிக லாபத்தை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்தபடியே புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

உங்கள் குடும்பத்தில் காணாமல் போன நீங்கள் இழந்த சந்தோஷங்கள் மீண்டும் உங்களை வந்து சேரும். பிள்ளைகளின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் முடியாது என்று நினைத்த காரியம் ஓன்று இப்போது நடந்து முடியும். பெண்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் சிக்கல் வருவதற்கு வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கடின முயற்சிகளை கையாளவேண்டும்.

ரிஷப ராசி குணங்கள் 

 

எல்லோரிடமும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நன்மை தரும். தவறான செயல்கள் செய்யாமல் இருப்பது நல்லது. கடன் தொல்லை இருக்கும் என்பதால் சமாதான முறையில் சமாளிக்க வேண்டும்.

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 
பரிகாரம்  செவ்வாய்க்கிழமைகளில் அம்பாள் கோவிலுக்கு சென்று காலையில் 3 முறை வலம் வரவும். அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்  கிழக்கு,வடக்கு.
செல்ல வேண்டிய தலம்  திருச்செந்தூர், மதுரை, திருவெற்றியூர்.
 மந்திரம்  “ஓம் ஸ்ரீ அம்பிகாயை நம”.
கிரக நிலை ராசியில்-செவ்வாய்,கேது
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்- சூரியன்
தைரிய வீரிய ஸ்தானத்தில் – புதன், சுக் (வ)
சனி சுக ஸ்தானத்தில்- குரு
களத்திர ஸ்தானத்தில் ராகு.

 

இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement