வரும் செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்கார்களுக்கு இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது

Advertisement

விருச்சிக ராசி செப்டம்பர் மாத பலன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் வரும் செப்டம்பர் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் அவர்களுக்கு நல்ல பலன்களை கிடைக்குமா? எந்த அளவிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள போகிறோம். இதற்கு முன்  விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி நடந்து முடிந்த நிலையில் அதன் பின் இந்த ராசியினருக்கு வாழக்கை எப்படி இருக்கப்போகிறது பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

விருச்சிக ராசி பலன்:

ஒவ்வொருவருக்கும் அவருடைய ராசியில் உள்ள ராசி நாதன் சரியாக அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு என்றும் நல்லது  நடக்கும். உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் 7 இதன் என்கின்ற திருமண சாணத்தில் அமர்ந்திருக்கிறார். குருவினுடைய பார்வை உங்கள் ராசியின் மீதி பதிகிறது. அதாவது கடவுளுடைய அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும் அதனால் உங்களுடைய யோசனை எண்ணங்கள் நினைத்து அனைத்தும் நடக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆகையால் இந்த மாதம் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வீர்கள். உங்களுடைய பேச்சி திறமையின் மூலம் பணவரவும் வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் உங்களுடைய பேச்சிக்கு நல்ல மரியாதையை கிடைக்கும் உங்களுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள். அதேபோல் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குரு பெயர்ச்சி ⇒ குரு பெயர்ச்சி 2022 to 2023 எப்போது வருகிறது?

சனி பகவான் வக்கிரம் பெற்று ஆட்சி பலத்துடன் 3 இடத்தில்  இருப்பதால். உங்கள் தேவையான தன்னம்பிக்கை தைரியம் கொடுக்கும்.

ராசிநாதன்  சொல்ல கூடிய செவ்வாய்பகவான் 7 இடத்தில் அமர்கிறார். அதுபோல் மனதில்  ஏற்படுத்தக்கூடிய சந்திரபகவான் இந்த மாத தொடத்திலேயே கேதுவோடு இணைந்து 12-யில் அமர்கிறார் இதனால் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவார். இருந்தாலும் 3 வது இடத்தில் சனி பகவான் இருப்பதால் மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்து நல்ல முடியை கொடுப்பார்.

நண்பர்கள் வழியில் நீண்ட நாளாக உதவி கேட்டு செய்யாமல் இருந்தவர்கள் இந்த மாதத்தில் உதவி செய்வார்கள் அதேபோல் நண்பர்களை புரிந்துகொள்ளாமல் இருந்துவந்த நீங்கள் இப்போது புரிந்துகொள்ளவீர்கள்.

நீண்ட நாளாக விற்பனை ஆகாமல் இருக்க கூடிய மனைகள் விற்பனை ஆகும் அதன் மூலம் உங்களுக்கு தேவையான பணவரவு கிடைக்கும்.

வேலைக்காக வெளியீர் பயணம் செல்வீர்கள் அங்கேயே வீடு வாங்கி தங்கும் அமைப்பும் உள்ளது.

காதல்காரன் என்று சொல்லக்கூடிய சுக்கிரன் 11 இடமான லாபஸ்தானத்தில் அமர்ந்து குருவுடைய பார்வை படுவதால் காதல் திருமணம் செய்யக்கூடிய அமைப்பு கிடைக்கும்.

6 இடத்தில் ராகு இருப்பதால் எதிரிகளை பந்தாட வைக்கும். கடன்  சார்ந்த விஷயத்திலும் கடன் படிப்படையாக குறைய கூடிய வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய அமைப்பும் உள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் குடிபெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

உங்களுடைய ராசி அதிபதி 7 ஆம் இடத்தில் இருக்கிறார் ஆகையால் திருமணம் சார்ந்த சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. 7 இடத்தில்  குருவுடைய பார்வை படுவதால்  திருமண வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டிருந்த பிரச்சனை மற்றும் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு இந்த வருடம் திருமணம் செய்ய முதல் முயற்சியில் வெற்றிகிடைக்கும்.

8 இடத்தின் அதிபதி என்கின்ற புதன் பகவான் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அதனால் உங்களுடைய வாழ்க்கையில் நீண்ட நாட்களாக சண்டை, வழக்கு போன்ற பிரச்சனைகள்  நடந்து கொண்டு இருந்தால்  அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

9  ஆம் இடமான பாக்யஸ்தானமான குருவுடைய பார்வை படுவதால் பாக்கியங்கள் பெறுக கூடிய அமைப்பு உள்ளது. ஏதாவது ஒரு பாக்கியம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், தன லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

அரசாங்க வேலைக்கு முயற்சி செய்ப்பவர்க்கு நல்ல செய்து வரும். அரசாங்க வேலையில்  இருப்பவர்களுக்கு இடம் மாற்றம், உயர் பதவிக்கு செல்வார்கள்.

ஆகவே இந்த மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும்.

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள்-2022

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement