Visagam Natchathiram Rasi
பொதுவாக இந்த உலகில் பிறந்தவர்களின் குணம் வேறுபட்டு தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் உடையதாக இருக்கும். இந்த குணங்களை மற்றவர்களிடம் கேட்டு தான் அறிந்து கொள்வார்கள். ஏனென்றால் நம்முடைய குணங்களை அறிந்து கொள்ள வேண்டிய ஆசை இருக்கும். நம்முடைய பதிவில் உங்களின் குணங்களை அறிந்து கொள்வதற்கு பல வழிகளில் பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
விசாக நட்சத்திரம் என்ன ராசி:
விசாகத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் துலாம் இராசியிலும் நான்காம் பாதம் விருச்சிக இராசியிலும் அமைந்துள்ளது
கல்வி:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள். உயர் கல்வியை கற்று கொள்வார்கள். எந்த கல்வி முறையை நீங்கள் படித்தாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள்.
தொழில்:
இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதால் மனநல மருத்துவர், கோயில் அறநிலையத்துறை பணிபுரிவார்கள். அப்படி இல்லையென்றால் வங்கி அல்லது பெரிய நிறுவனங்களில் பணி புரிபவராக இருப்பார்கள்.
இவர்கள் சொந்தமாக தொழில் செய்தாலும் சரி அல்லது தனியாரில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி அந்த இடத்தில் சிறந்து விளங்க கூடியவராக இருப்பார்கள்.
குடும்பம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு தாமதமாகும். இவர்கள் மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது பாசமாக இருப்பார்கள். இவர்கள் கூட்டு குடும்பமாக வாழ்வதற்கு தான் ஆசைப்படுவார்கள். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது சண்டை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது நல்லது. நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும், தீயவர்களுக்கு தீயவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியம்:
விசாக நட்சத்திரத்தில் உள்ளவர்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த மாட்டார்கள். அடிக்கடி உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். இதனால் மருத்துவ செல்வுகள் அதிகமாக ஏற்படும். மேலும் இதயத்திலும், சிறுநீரகத்திலும் பிரச்சனை ஏற்படும்.
வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி..? அப்படி விரதம் இருந்தால் என்ன நடக்கும்..?
விசாக நட்சத்திரம் குணங்கள்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். இவர்களின் உடல் அமைப்பானது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் முடிவெடுக்கும் திறமை இவர்களிடம் காணப்படும். பெரியவர்களை மதித்து நடப்பார்கள். அவர்களை சொல்வதை கேட்டு தான் அடுத்த செயலை செய்வார்கள். அது போல தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை விட்டு கொடுக்க மாட்டார்கள்.
வெளியூர் மற்றும் வெளிநாடு அதிகம் செல்ல கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் நன்மையும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தன்னுடைய குடும்பத்திற்காக எந்த செயலையும் செய்ய கூடியவராக இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருப்பதால் இந்த விஷயத்தில் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |