Visakam Natchathiram
மனிதர்களை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு வகையான பிரிவினை உடையவராக காணப்பட்டாலும் கூட இவர்களின் குணம் என்பது வேறுபட்டு தான் காணப்படுகிறது. அப்படிப்பட்ட குணத்தினை நாம் சரியாக புரிந்து கொள்வது என்பது தவறு. அதேபோல் நாம் நீண்ட காலமாக ஒருவரிடம் நெருங்கி பழகி இருந்தாலும் கூட அவர்களின் குணத்தினை சற்றென்று புரிந்துகொள்வது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தில் ஒருவரின் ராசி மற்றும் நச்சத்திரத்தினை வைத்து அவர்களின் குணம் முதல் வாழ்க்கையில் நடக்கும் மற்ற செயல்கள் என அனைத்தினையும் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்று விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம், கல்வி, தொழில் மற்றும் இதர அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
விசாகம் நட்சத்திரம் குணங்கள்:
- விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிபதியாக குரு பகவான் இருப்பதால் பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவராக காணப்படுவார்கள். மேலும் இரக்க குணம் வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.
- அதேபோல் கொஞ்சம் பிடிவாதம் என்பது இவருடைய குணத்தில் எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மைக்கு கட்டுப்பட்டு செயல்படும் திறமை வாய்ந்தவர்கள்.
- ஆனால் இந்த நட்சத்திரத்திரக்காரர்கள் அடிப்படையில் கொஞ்சம் பொறாமை குணம் வாய்ந்தவராக இருப்பார்கள்.
- இத்தகைய நட்சத்திரக்காரர்கள் அவர்களின் கடின உழைப்பால் சம்பாதித்து சேமித்து வாழ்க்கையில் முன்னேறும் தன்மை வாய்ந்தவர்கள்.
- இவர்களின் அன்பான குணத்தினால் நண்பர்கள் கூட்டம் ஆனது அதிகமாக இருக்கும். மேலும் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்தினை உடையாவராகவும் இருப்பார்கள்.
- மேலும் இவர்கள் தெய்வபக்தி உடையவராக இருப்பார்கள்.
- விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தீ, தா, தே மற்றும் தோ ஆகிய எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா |
விசாகம் நட்சத்திரம் வாழ்க்கை ரகசியம்:
கல்வி:
விசாக நட்சத்திரக்காரர்கள் கற்கும் கல்வியில் நன்கு வல்லமை பெற்றவராக இருப்பார்கள். அதேபோல் கல்வியில் உயர்ந்த நிலைக்கு செல்லும் ஆற்றல் படைத்தவராகவும் இருப்பார்கள்.
தொழில்:
இவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலையினை செய்யும் திறமை கொண்டவர்கள். மேலும் செய்யும் பணியினை ஆர்வத்துடனும், நேர்மையுடனும் செய்வார்கள். ஆனால் இவர்களுக்கு கணிதம் மற்றும் கலை ரீதியான வேலையில் தான் அதிக நாட்டம் காணப்படும்.
திருமண வாழ்க்கை:
இந்த நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் காதல் திருமணத்தை விரும்ப மாட்டார்கள். அதனால் இவர்களிளுக்கு பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிக பாசம் நிறைந்தவராக இருப்பார்கள்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா |
விசாக நட்சத்திரம் அதிர்ஷ்டமான எண்:
அதிர்ஷ்டமான எண்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான எண் 2, 3 மற்றும் 9 ஆகும்.
அதிர்ஷ்டமான நிறம்:
மஞ்சள் நிறமானது இத்தகைய ராசிக்காரர்களுக்கு ஏற்ற நிறமாக உள்ளது.
ராசி கல்:
இத்தகைய நட்சத்திரக்கர்களுக்கு ராசியான கல் புஷ்பராக கல் ஆகும்.
அதிபதி:
இந்த நட்சத்திரக்காரரின் அதிபதி குரு பகவான் ஆவார்.
விசாக நட்சத்திரம் மந்திரம்:
ஓம் இந்த்ராக்னிப்யாம் நம.
கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |