விஷ்ணுபதி புண்யகாலம் 2024 | Vishnupathi Punyakalam 2024 in Tamil

Advertisement

Vishnupathi Punyakalam 2024 in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் விஷ்ணுபதி புண்யகாலம் 2024 பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம்மில் பலருக்கும் விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன..? அது ஏன் கொண்டாடப்படுகிறது..? விஷ்ணுபதி புண்யகாலத்தின் நேரம் எப்பொழுது தொடங்குகிறது என்ற முழு விவரங்களையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.

பெருமாளுக்கு உகந்த நாள் இது தானா

விஷ்ணுபதி புண்யகாலம் என்றால் என்ன..? 

விஷ்ணுபதி புண்யகாலம்

விஷ்ணுபதி புண்யகாலம் என்பது விஷ்ணு பூஜை செய்வதற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த நேரம் ஒரு வருடத்தில் நான்கு முறை மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது.

இது வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகும்.

இது சூரியனின் இடைநிலை இயக்கத்தால் ரிஷபம், கும்பம், விருச்சிகம் மற்றும் சிம்மத்தின் ‘நிலையான’ அடையாளமாக வரையறுக்கப்படுகிறது. புராணங்களின் படி, விஷ்ணுபதி என்பது பிரபஞ்சத்தின் பாதுகாவலரான ஸ்ரீ ஹரி விஷ்ணு இந்த பிரபஞ்சத்தின் நலன் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அற்புத செயல்களைச் செய்யும் காலம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு திகழ்கிறது.

ஆகவே இந்த நாளில் விஷ்ணு மற்றும் கருடன் வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

பெருமாள் கோவிலில் உட்கார கூடாது, சிவன் கோவிலில் உட்காராமல் வர கூடாது என்று சொல்வது எதனால்..

விஷ்ணுபதி புண்யகாலம் 2024 நேரம்: 

விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது வைகாசி முதல் நாள் நள்ளிரவு 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இருக்கும்.

இதுபோலவே ஆவணி 1 ஆம் தேதி, கார்த்திகை 1 ஆம் தேதி, மாசி 1 ஆம் தேதி அன்று நள்ளிரவு 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

விஷ்ணுபதி புண்யகாலம் வழிபாடு: 

  • இன்றைய தினம் அதாவது, மே மாதத்தின் 14 ஆம் தேதி செவ்வாய் கிழமையான இன்று குளித்து விட்டு உங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.
  • கோவிலுக்கு செல்லும் போது பெருமாளுக்கு உகந்த பூக்களை எடுத்து செல்லுங்கள்.
  • நீங்கள் எடுத்து செல்லும் பூக்கள் 27 ஆக இருக்க வேண்டும்.
  • கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு, கோவிலை 27 முறை சுற்றி வாருங்கள்.
  • நீங்கள் 27 முறை கோவிலை சுற்றி வரும் போதும், கொடிமரத்துக்கு கீழே ஒவ்வொரு முறையும் ஒரு பூவை வையுங்கள்.
  • அப்படி கோவிலை சுற்றி வரும் போது, பெருமாளின் மந்திரத்தை சொல்ல வேண்டும். உங்களுக்கு எந்த மந்திரம் தெரியுமோ அந்த மந்திரத்தை தாராளமாக சொல்லலாம்.
  • உதாரணத்திற்கு “ஓம் நமோ நாராயணா, கோவிந்தா, பெருமாளே” என்று உங்களுக்கு பெருமாளின் எந்த நாமம் பிடித்திருக்கிறதோ, அதை மந்திரமாக உச்சரிக்கலாம்.
  • மேலும் நீங்கள் “ஸ்ரீ ராம ஜெயம்” என்று சொன்னாலும் தவறில்லை.
  • அதுமட்டுமில்லாமல், பெருமாளுக்கு துளசி இலை வாங்கிக் கொடுப்பது, பெருமாளுக்கு உங்கள் பெயரைச் சொல்லி தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்வது போன்ற வழிபாடுகளை எல்லாம் செய்யலாம்.

மேலும் நீங்கள் இந்த வழிபாடுகளை காலை 10:30 மணிக்குள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement