வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன் தெரியுமா?
நாம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். அது அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கும். ஆனால் இன்று அந்த செயல்கள் பல மூட நம்பிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது. அதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் இப்பொழுது யாருக்கும் தெரிவது இல்லை. நம்முன்னோர்கள் பயன்படுத்திய உணவு, இயற்கைக்காரணிகள் அவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்தது. ஆனால் இன்று அனைத்துமே செயற்கையாக மாறிவிட்டது. இதனால் முன்னோர்கள் சொல்லிச்சென்ற அனைத்தும் மூடநம்பிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது.
அவர்கள் அப்படி சொல்லிச்சென்ற ஒரு கருத்துதான் வீட்டில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவது என்பது, அதில் உள்ள அறிவியல் தெரியாமல் இன்று அதனை மூடநம்பிக்கை என்கின்றோம். அந்த வகையில் இன்று வீட்டின் வாயிலில் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுவதால் ஏற்படும் அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மூட நம்பிக்கையா அல்லது அறிவியலா?
நாம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற ஒன்றுதான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது, இதனை நம் முன்னோர்கள் எதற்காக செய்தனர். இதன் பின்னால் இருப்பது மூட நம்பிக்கையா அல்லது அறிவியலா இந்த சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
கண்டிப்பாக இந்த செயல் மூட நம்பிக்கை இல்லை. இதில் பல அறிவியல் காரணங்கள் உள்ளன.
ஆனால் மக்களின் பெரும்பாலானவர்கள் இதனை ஆன்மிக செயலாக பார்க்கின்றனர். இவ்வாறு செய்தல் மஹாலக்ஷ்மி வீட்டில் இருப்பாள் அதனால் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் அதுவல்ல. எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் எலுமிச்சை மற்றும் மிளகாயை கயிரில் கோர்க்கும் போது பழத்தில் உள்ள வைட்டமின் கயிரில் பரவுகிறது. பின்னர் அது ஆவியாகிறது. அந்த ஆவி காற்றில் உள்ள நச்சுக்களை அளிக்கிறது.
இதனால் தான் வீட்டின் வாயிலில் எலுமிச்சை மிளகாய் கட்டப்படுகிறது.
வைட்டமின் சி நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |