வியாபாரம் பெருக பரிகாரம்
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் மட்டுமே வருகிறது என்று சொல்லி புலம்புபவர்களே இங்கு அதிகம். இதற்காக எத்தனையோ பரிகாரம் செய்தும் பலனில்லை என்று சொல்கிறீர்களா..? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. இன்று நம் பதிவின் வாயிலாக தொழிலில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, உங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
1 இலை போதும்..! தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்
தொழில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க பரிகாரம்:
இப்போது நம் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்க நாம் செய்யபோகின்ற பரிகாரம் தான் எலுமிச்சை பரிகாரம்.
பொதுவாக அந்த காலத்தில் இருந்து எலுமிச்சைப் பழம் ஒரு ஆன்மீக பொருளாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் எலுமிச்சை பழத்தில் இருக்கும் சக்தி நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றலை உள்வாங்கும் திறன் கொண்டது. அதனால் ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்தும் நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் தண்ணீர். இந்த தண்ணீர் பஞ்சபூதங்களில் ஒன்றாகும். அதுபோல தண்ணீரில் பஞ்சபூதங்களின் சக்தியும் அடங்கி இருக்கிறது. அதனால் தண்ணீரை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை சேர்த்து கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் ஆன்மீக சக்தி கொண்ட ஒரு பொருள்.
அடுத்து அந்த தண்ணீரில் எலுமிச்சை பழத்தை போட்டு, அதை நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்து விடுங்கள். இதுபோல வைக்கும் போது இந்த தண்ணீரில் இருந்து வரும் ஆற்றல், எதிர்மறை ஆற்றலை அழித்துவிடும்.
அதுமட்டுமில்லாமல், உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். வருமானம் அதிகரிக்கும். இதுபோல நீங்கள் வைக்கும் தண்ணீர் ரொம்ப நாள் ஆனாலும், கெட்டுப்போகாமல் இருக்கும். இருந்தாலும் அந்த தண்ணீரை 3 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொண்டே இருங்கள்.
இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் லாபம் அதிகமாக வருவதை காணலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |