இந்த 2 பொருளை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் போதும்.! வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும்.!

Advertisement

சொந்த தொழில் சிறக்க பரிகாரம் | தொழில் நன்றாக நடக்க என்ன செய்ய வேண்டும்

இக்காலத்தில் சுயதொழில் செய்து லாபம் ஈட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஒரு சிலரின் கைராசி தொழிலில் பலமடங்கு லாபத்தை தரும். ஆனால், ஒரு சிலரின் கைராசி தொழிலில் முதலீடு செய்த தொகையை கூட ஈட்டமுடியாமல் கஷ்டப்படுவார்கள். அப்படி தொழிலில் லாபம் இல்லாமல் இருக்கும் வியாபரிகளுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். சுயதொழில் என்பது அவர்களின் கைராசியை பொறுத்தது. நாம் ஒரு சிறிய கடையை வைத்தால் கூட எல்லா வாடிக்கையாளர்களையும் வசப்படுத்தும் தன்மை நம் கடைக்கு இருக்க வேண்டும். அதாவது,  சுயதொழிலுக்கு வசப்படுத்தும் தன்மை இருக்க வேண்டும். வசியம் என்பது வாடிக்கையாளர்களையும் லாபத்தையும் நம் வசப்படுத்தக்கூடிய திறமை ஆகும். சொந்த தொழிலில் லாபத்தை எப்படி வசப்படுத்துவது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது, கிழே குறிப்பிட்டுள்ள இந்த 2 பொருட்களை வைத்து எளிமையான பரிகாரம் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

தொழிலில் லாபம் பெருக | கடையில் நல்ல வியாபாரம் நடக்க:

பணத்தை ஈர்க்கும் பொருளை வாங்கி தொழில் செய்யும் இடத்தில் வைத்தாலே போதும். லாபம் பலமடங்கு அதிகரிக்கும். அது என்ன பொருள் என்னவென்றால் ஒன்று  கஸ்தூரி மஞ்சள் மற்றொன்று கசகசா ஆகும்.

 viyabaram selika

இந்த இரண்டு பொருளிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது.

பொதுவாக மஞ்சளிற்கு, இயற்கையாகவே வசீகரிக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக வாசனை நிறைந்த கஸ்தூரி மஞ்சளுக்கு வசீகரிக்கும் தன்மை அதிகமாகவே உள்ளது. அடுத்தப்படியாக, சமையலுக்கு பயன்படுத்தப்படும் கசகசாவிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. 

பணவரவு அதிகரிக்க 5 ரூபாய் நாணயம் மட்டும் போதும்..

எனவே, தொழில் செய்யும் இடத்தில் அல்லது பூஜை செய்யும் இடத்தில் ஒரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சளையும் மற்றொரு கிண்ணத்தில் கசகசாவையும் வைக்க வேண்டும்.

பிறகு, இரவில் தூங்குவதற்கு முன்பு பூஜை அறையில் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். அத்தண்ணீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவினை சேர்த்து ஊறவைத்து விடுங்கள்.

 வருமானம் அதிகரிக்க பரிகாரம்

மறுநாள் காலையில்,  பூஜை அறையை சுத்தம் செய்து, கடவுளுக்கு பூஜை செய்து முடித்த பிறகு, அந்த டம்ளரில் உள்ள தண்ணீரை எடுத்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தின் வாசலிலும், கடையின் உட்புறத்தில் உள்ள மூலை முடுக்கிலும் இத்தண்ணீரை தெளித்து விட வேண்டும்.

இந்த சிறிய பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் பலமடங்கு பலன்களை பெறலாம்.

வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட இந்த ஒரு இலை மட்டும் போதும்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement