வியாழன் சுக்கிரன் சேர்க்கையால் 2024 முதல் இந்த ராசிக்காரவங்க ராஜா வாழ்க்கை வாழப்போறாங்க..!

Advertisement

Viyalan Sukran Serkai 2023

பொதுவாக புதிதாக ஒரு விஷயம் செய்யப்போகிறோம் என்றால் அதன் மீது அதிக ஆர்வம் இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் புது வருடம், அன்றாட நாள் என இத்தகைய முறையிலும் நிறைய நபர்களுக்கு ஆன்மீக நம்பிக்கைகள் அதிகமாக காணப்படும். ஏனென்றால் நம்முடைய ராசிக்கு இந்த வருடமாவது அமோகமான வருடமாக அமையுமா என்ற சிந்தனையிலேயே ஒவ்வொரு வருடத்தினையும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பவர்கள் இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படி பார்க்கையில் இந்த 2023-ஆம் ஆண்டில் நாம் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்து இருக்கும். ஆனால் இனி நீங்கள் நடந்து முடிந்த இந்த வருடத்தை நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி அன்று சுக்கிரன் பகவான் துலாம் ராசிக்கு மாறுகிறார். ஆகவே இத்தகைய பெயர்ச்சியினால் சுக்கிரனும், வியாழனும் எதிர் எதிரே காணப்படுகிறார்கள். இத்தகைய மாற்றத்தினால் ராஜயோகம் உருவாகிறது. எனவே இந்த ராஜா யோகத்தை எந்த ராசிக்காரர்கள் பெறப்போகிறார்கள் என்பதை இந்த பதிவின் வாயிலாக விரிவாக காணலாம் வாங்க..!

வியாழன் சுக்கிரன் சேர்க்கை:

மகர ராசி:

மகர ராசி

வியாழன் மற்றும் சுக்கிரனால் உருவான இந்த ராஜ யோகத்தை பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் ரீதியாக அமோகமான பலன்களை அளிக்கிறது. ஆகையால் இதுநாள் வரையிலும் இல்லாத முன்னேற்றம் பொருளாதாரம் ரீதியாக காணப்படும்.

மேலும் இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு 2024-ஆம் ஆண்டில் வேலை கிடைக்க்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரித்து காணப்படும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

ராசியில் முதல் ராசியான மேஷ ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் எதிர்பார்த்த பலன்களை அளிக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. மேலும் திருமண பேச்சுகள் விரைவில் கூடி வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

இத்தகைய நேரத்தில் நிதிநிலை உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அமையும். மேலும் குடும்பத்தில் இருந்து சிறு சிறு சிக்கல்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி காணப்படும்.

வக்ர சனியால் இந்த 5 ராசிக்காரர்கள் 2024 ஜூன் வரை கவனமாக இருக்கவும்.

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசியை பொறுத்தவரை எதில் பலன்கள் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் வேலை ரீதியான பலன்கள் சிறப்பானதாக அமையும். அதனால் வேலை ரீதியான சங்கடங்கள் அனைத்தும் நீங்கி பணப்புழக்கமும் அதிகரித்து காணப்படும்.

மேலும் மற்றொரு அதிர்ஷ்டமாக நீங்கள் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் விதமாகவும் காணப்படுகிறது.

கன்னி ராசி:

கன்னி ராசி

வியாழன் சுக்கிரன் கிரகணத்தினால் உருவாகிய இந்த யோகத்தினால் கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றி அளிக்கும் விதமாக இருக்கிறது. ஆகையால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல அமோகமான நிலை அமையும். அதேபோல் ஒரு சிலருக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு என இத்தகைய பலன்களும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

உங்களுடைய வாழ்வினை சிறப்பான முறையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இதில் இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement