வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2025 தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள்

Updated On: April 11, 2025 1:05 PM
Follow Us:
Wealth Gaining Zodiac Signs in Tamil New Year 2025
---Advertisement---
Advertisement

தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள்  | Wealth Gaining Zodiac Signs in Tamil New Year 2025 in Tamil

மொத்தமுள்ள அறுபது தமிழ் வருடங்களில் 39ஆம் ஆண்டான விசுவாவசு வருடம், 13.4.2025 அன்று நள்ளிரவு, 14.4.2025 அதிகாலையில் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அமையும் கிரஹ அமைப்புகள், இந்த வருடத்தில் நிகழ உள்ள குரு, ராகு-கேது கிரக பெயர்ச்சிகளால் சில ராசிகளுக்கு அதிக பலன்களை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

மீனம்:

தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள் 

இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்கள் எந்த செயல் செய்தாலும் அதனை அமைதியாகவும், கவனமாகவும் செய்ய வேண்டும். முக்கியமாக அலுவலகம் அல்லது கம்பெனியில் வேலை பார்ப்பவராக இருந்தால் வேலை செய்யும் போது வேலையில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்.உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் நெருங்கி பழக வேண்டாம். ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையைக நெருங்கி பழகுவீர்கள் ஆனால் அவர்களே உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை சம்மந்தமாக உள்ள விஷயங்களை கவனமாக செய்ய வேண்டும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் அவர்களுக்கு திடீரென வளர்ச்சி காணப்படும்.

மகரம்:

Capricorn

மகர ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு ஆனது தீமைகள் நீங்கி நல்லவை நடக்க கூடியதாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கும் மேல் அதிகாரிகளுக்கும் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை தீர்ந்து விடும். பணியிடம் மாறக்கூடும். இதனால்  மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் சில நபர்களுக்கு பதிவு உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டு பிரச்சனையும், வேலையில் இருக்கும் பிரச்சனையையும் பொது இடத்தில் பேச வேண்டாம். பேச வேண்டாம் என்றால் அதில் இருக்கும் பிரச்சனைகளை புலத்து வேண்டாம். சொந்தமாக தொழில் செய்வர்களுக்குஇதுவரை இருந்ததை விட வளர்ச்சி காணப்படும். நிதிநிலைமை அதிகரிக்கும். இதனால் வீட்டில் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீன ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நன்மையா! தீமையா.!

தனுசு:

தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள் 

அலுவலங்களில் உங்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் மேல் அதிகாரிகளிடம் அதிகமான பாராட்டை வாங்க கூடிய நேரமாக இருக்கிறது. அலுவலகத்தில் யாரோ செய்த தவறால் உங்கள் மேல் பலி வரும். இதனால் கவலை அடைவீர்கள். வேலையிடத்தில் பொறுமை ரொம்ப முக்கியமாக இருக்கிறது. பிறர் செய்த தவறை சுட்டி காட்டுங்கள். ஆனால் இதனை பெரிது படுத்த வேண்டாம். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் ரொம்ப உகந்ததாக இருக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி வளர்ச்சி காணப்படும்.

ரிஷபம்:

தமிழ் புத்தாண்டில் கோடியில் புரள போகும் ராசிகள் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். உங்களிடம் தன்னமிபிக்கையும், தைரியமும் அதிகரிக்க கூடும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது.பணியிடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இந்த பொறுப்புகள் மூலம் உங்களுக்கு மிகுந்த நன்மைகள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை உங்களுக்கு தொழில் வளர்ச்சியானது மந்தமாக இருந்தாலும் இந்த நேரம் சற்று உயரும். மேலும் வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now