முருகன் ஆண்டி கோலம் மற்றும் ராஜ அலங்காரம்
அனைவருக்கும் பிடித்த கடவுளான முருக பெருமான் கஷ்டங்கள் நீக்குபவர். முருக பெருமானை சஷ்டி திதி அன்று வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். முக்கியமாக முருகப்பெருமானை செவ்வாய் கிழமை அன்று வழிபடுவது மிகவும் நல்லது. ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அதேபோல், துன்பங்கள் நீக்கும் முருகப்பெருமானை யார் எப்போது எந்த கோலத்தில் வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்று பார்க்கலாம் வாங்க.
முருகப்பெருமானை வழிபட்டால் போதும் நமக்கு இருக்கும் அணைத்து பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இருந்தாலும், முருகனை வழிப்படுவதற்கு இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று ஆண்டி கோலம் மற்றொன்று ராஜ அலங்காரம். ஆகையால் முருகப்பெருமானை எப்போது ஆன்டி கோலத்திலும் எப்போது ராஜ அலங்காரத்திலும் தரிசனம் செய்வது நல்லது என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
Murugan Raja Decoration and Andi Golam Darshanam Benefits in tamil:
எப்போது ராஜ அலங்காரம் நல்லது:
- புதிய வாழ்க்கையை தொடங்குபவர்கள், முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்வதன் மூலம் நன்மைகளை பெறலாம்.
- கிரகப்பிரவேசத்தின்போதும், திருமணம் நடக்கும்போதும் முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்வது நல்லது.
- வீடு விற்பதற்கான செயலை தொடங்கும்போதும் பிறகு விற்பனை செய்யும் போதும் முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்வது நல்லது.
- அதாவது, எந்தவொரு சுப காரியம் செய்யும்போதும் முருகப்பெருமானை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.
முருக பெருமானை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா..?
எப்போது ஆன்டி கோலம் நல்லது:
எவர் ஒருவற்கு தீராத நோய் பிரச்சனையும் மற்றும் தீராத பிற பிரச்சனையும் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறதோ அவர்கள் முருகனை ஆன்டி கோலத்தில் தரிசனம் செய்வதன் மூலம் தீராத பிரச்சனை எதுவாயினும் அதிலிருந்து விடுபடலாம். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், நம்மால் சமாளிக்க முடியாத அளவிற்கு தீராத நோய்ம் கடன் பிரச்னை போன்றவை இருக்கும்போது முருகனை ஆன்டி கோலத்தில் தரிசனம் செய்வது நல்லது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |