போகி அன்று இந்த பொருட்களை எல்லாம் தீயில் போடுங்கள்..!

Advertisement

What are The Items to be Burnt on Bhogi in Tamil

போகி பண்டிகை என்று வீட்டில் உள்ள பழைய குப்பைகளை எல்லாம் அகற்றி வீட்டை தூய்மைப்படுத்தி கொள்ள வேண்டும். அந்த தினத்தில் நாம் அனைவருமே போகி அன்று பழைய பொருட்களில் கொளுத்துவது வழக்கம். ஆகையால், போகி பண்டிகை அன்று முக்கியமாக என்னென்ன பொருட்களை எரிக்க வேண்டும் என்பதை இப்பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழர்களின் விழாக்களில் பொங்கல் பண்டிகை விழா மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து 4 நாட்கள் பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டப்படுகிறது. முதல் நாள் போகி, மறுநாள் தைத்திருநாள், மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் மற்றும் நான்காம் நாள் காணும் பொங்கல் என மிகவும் சிறப்பாக கொண்டப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பாக இருந்தே வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்தல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை தொடங்கி விடுவார்கள். அதன் பிறகு, போக்கி அன்று போகி தீயில் சில பொருட்களை போட்டு எரிப்பார்கள். அந்த வகையில், இப்பதிவின் வாயிலாக என்னென்ன பொருட்களை இப்பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க.

போகி பண்டிகை வரலாறு

போகி அன்று எரிக்க வேண்டிய பொருட்கள்:

போகி அன்று எரிக்க வேண்டிய பொருட்கள்

  • போகி அன்று, கொளுத்தும் குப்பையில் வீட்டில் உள்ள பழைய துணிகள், பாய்கள் போன்ற பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை கொளுத்த வேண்டும்.
  • சமையலறையில் நீண்ட நாட்களாக பயன்படுத்தும் சமையல் துணிகள் போகியில் போட்டு கொளுத்தி விடுங்கள்.
  • வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் பொருட்களை வீட்டில் தேக்கி வைக்காமல் அதனை போகி அன்று கொளுத்தி விடுங்கள்.
  • வீட்டில் தேவையற்ற பழைய பேப்பர், நியூஸ் பேப்பர் போன்ற காகிதங்களை தீயில் போட்டு கொழுத்தி விடுங்கள்.
  • இந்த பொருட்களுடன் சேர்த்து உங்களின் விரோதம், பேராசை, சோம்பல், உடல்நலக்குறைவு, தீய பழக்கங்கள் ஆகியவற்றையும் உங்கள் மனதில் இருந்து எரித்து விடுங்கள். மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி விட்டு நல்ல எண்ணங்களை விதைத்திடுங்கள்.

போகி அன்று எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை கட்டாயம் செய்திடுங்கள்..!

திருஷ்டி கழிய போகி அன்று செய்ய வேண்டியவை:

குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறீர்களோ அந்த எண்ணிக்கையில் மிளகினை எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு சிகப்பு நிற துணையில் வைத்து கட்டி கொள்ளுங்கள். இந்த முடிச்சினை போகி முதல் நாள் அன்று இரவில் தலையணைக்கு அருகில் வைத்து தூங்குங்கள்.

அதன் பிறகு, மறுநாள் காலையில் எழுந்து அதனை போகி தீயில் போட்டு விடுங்கள். போடும்போது, தலையை வலப்பக்கம் இருந்து இடப்பக்கமாகவும் இடபக்கமிருந்து வலப்பக்கமாகவும் சுற்றி போட வேண்டும். இவ்வாறு நீங்கள் போகி அன்று காலை செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement