வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாமா?

Advertisement

வீட்டில் ஒரே ராசியில் இருவர் இருந்தால் என்ன பலன் 

ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம்..  இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் வீட்டில் இருப்பவர்களின் ராசி ஒரே ராசியாக இருக்கலாமா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் அந்த குழந்தை எந்த ராசியில், எந்த நட்சத்திரத்தில், எந்த லக்கினத்தில் பிறந்துள்ளது என்பதை உடனே குறித்து வைத்துக்கொண்டு அந்த குழந்தைக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஜாதகம் எழுதுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தை வைத்து தான் அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் வீட்டில் இருப்பவர்களின் ராசி ஒரே ராசியாக இருந்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாமா?

வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்கு நட்சத்திரம், லக்னம் இது போன்ற ராசி அமைப்புகளை பொறுத்து பலன்கள் வேறுபடும்.

அதாவது வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரே ராசியாக இருந்து வெவ்வேறு நட்சத்திரங்களாக இருந்தால் அவர்களுக்கு நன்மை தீமை ஆகிய இரண்டு கலந்தும் காணப்படும்.

அதுவே ஒரே ராசி ஒரே நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்கு ஒரே பலன்களாக இருக்கலாம் அதாவது கிரகங்கள் சரியாக இல்லாத நாட்களில், சந்திராஷ்டமம் இது போன்ற தினங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கும்.

ஆக இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கோயில்களில் துலாபாரம் கொடுக்கலாம். துலாபாரம் என்பது எடைக்கு எடை தங்களால் முடிந்த பொருட்களை காணிக்கை செலுத்தலாம். இவ்வாறு காணிக்கை செலுத்தி கடவுளிடம் பிரச்சனை செய்துகொண்டால் போதும் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

அதாவது வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ராசி, ஒரே லக்னம், ஒரே நட்சத்திரம் இது போன்று இருக்கிறது என்றால் அவர்கள் ஏதாவது ஒரு கோயிலில் துலாபாரம் கொடுப்பதன் மூலம் சில விரையான்களில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement