உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றி சொல்லிவிடும்..?

what does the third letter of your name say about you in tamil

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து உங்களை பற்றி என்ன சொல்கிறது..? 

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் உங்கள் பெயரின் 3 ஆவது எழுத்தை வைத்து உங்கள் குணத்தை கண்டறிய போகிறோம். இதுவரை நாம் இந்த பதிவில் முதல் எழுத்தை வைத்து நம் குணங்களை தெரிந்து கொண்டிருப்போம். அது போல இன்று நாம் 3 வது எழுத்தை வைத்து ஒருவரின் குணம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

ஒருவரின் பெயர் தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினத்திற்கும் ஒரு பெயர் உண்டு. ஜப்பான் நாட்டில் இந்த மூன்றாவது எழுத்து ஒரு முக்கியமான எழுத்தாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பெயரின் மூன்றாவது எழுத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ P என்ற எழுத்தில் தொடங்கும் பெயரின் குணங்கள்

மூன்றாவது எழுத்து A வாக இருந்தால்..? 

ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் 3 வது எழுத்து A வாக இருந்தால் அவர்கள் அதிகம் வலிமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இயற்கையாகவே இவர்களிடம் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். இவர்கள் நினைத்த காரியங்களை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் இவர்களின் முயற்சியால் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

B – யாக இருந்தால் குணம் எப்படி இருக்கும்..?

மூன்றாவது எழுத்து B – யாக இருந்தால் அவர்கள் அதிகம் பேராசை படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள் இருந்தாலும் இவர்களிடம் சுயநலம் காணப்படும். மற்றவர்களுக்கு  உதவி செய்வதில் அதிகம் கஞ்சனாக இருப்பார்கள்.

மூன்றாவது எழுத்து C என்றால்..? 

C என்ற எழுத்தை கொண்டவர்கள் வெகுளி குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களிடம் பழிவாங்கும் குணம் அதிகம் இருக்கும். அதே சமயத்தில் இவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரும் இருக்கும். இவர்கள் அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

D மூன்றாவது எழுத்தாக இருந்தால்..?  

ஆங்கிலத்தில் D மூன்றாவது எழுத்தாக இருந்தால் இவர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். D என்ற எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் இவர்களின் ஆசை படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

E எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..? 

E எழுத்தை மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் பழகுவார்கள். கருணை உள்ளம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கடினமான வேலையை கூட எளிதில் முடிக்கும் திறமைசாலிகளாக இருப்பார்கள்.

மூன்றாவது எழுத்து F – வாக இருந்தால்..? 

மூன்றாவது எழுத்து F – வாக இருந்தால்  மற்றவர்களிடம் அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பொறுப்புடனும் நடந்து கொள்வார்கள். இவர்கள் சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

G மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் இவர்களின் ஆசைப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்கள் சிந்தித்து செயல்படுபவராக இருப்பார்கள். புதிதான விஷயங்களை செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

H எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..? 

H என்ற எழுத்தை மூன்றாவதாக கொண்டவர்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்களிடம் பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் அதிகம் இருக்கும். இருந்தாலும் இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மூன்றாவது எழுத்து I என்றால்..? 

இவர்கள் யோசித்து செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிகம் கோபப்படுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஏமாறும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

J மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

இவர்கள் பிடித்த ஒரு விஷயத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தது போல் செயல்படுவார்கள். ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்களிடம் தன்னம்பிக்கை அதிகம் காணப்படும்.

K எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..? 

ஆங்கிலத்தில் K என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடன் அன்புடன் பழகுவார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை எளிதில் தீர்த்து விடுவார்கள். இவர்கள் எந்த காரியத்தையும் கவனத்துடன் செய்வார்கள்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பெயரின் முதல் எழுத்தை வைத்து உங்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா

மூன்றாவது எழுத்து L என்றால்..? 

இவர்கள் வித்தியாசமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் நகைசுவை உணர்வு அதிகம் இருக்கும். இவர்கள் அனைவரையும் சமமான எண்ணத்தில் பார்ப்பார்கள். இவர்கள் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

M மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

M என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்வார்கள். இயற்கையாகவே இவர்கள் கடும் கோபக்காரர்களாக இருப்பார்கள்.

N எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?  

இவர்கள் பார்ப்பதற்கு சாதுவாக இருப்பார்கள். எதை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களுடன் அன்பாக பழகுவார்கள். அக்கறையும் காட்டுவார்கள். இவர்கள் நல்லவர்களாக காணப்படுவார்கள்.

மூன்றாவது எழுத்து O என்றால்..? 

O என்ற ஆங்கில எழுத்தை  பெயரின் மூன்றாவது எழுத்தாக இருந்தால் அவர்கள் தொழிலில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்பும் பாசமும் காட்டுவார்கள். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

P மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

P மூன்றாவது எழுத்தாக இருந்தால் அவர்கள் எப்பொழுதும் நாம் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்களிடம் பிடிவாத குணம் அதிகம் இருக்கும். இவர்கள் தன்னை சுற்றி உள்ளவர்களை எபோழுதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

Q எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?  

ஆங்கிலத்தில் Q என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தனக்கு பிடித்த எதையும் மற்றவர்களுக்கு விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்கள்  அதிகம் வெட்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மூன்றாவது எழுத்து R என்றால்..? 

R என்ற எழுத்தை கொண்டவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கல்வியின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம் இருக்கும். பிடித்தவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இரக்க குணம் அதிகம் இருக்கும்.

S மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

S மூன்றாவது எழுத்தாக இருந்தால் அவர்கள் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைத்து விஷயத்திலும் அதிகம் பேராசை படுவார்கள். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

T எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?  

T எழுத்தை கொண்டவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். தன்னுடைய வேலையை செய்வதற்கு கூட சோம்பேறியாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்த்து வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் அதிகம் இருக்கும்.

உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..!

மூன்றாவது எழுத்து U என்றால்..? 

மூன்றாவது எழுத்து U வாக இருந்தால் அவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள். பிடித்ததை செய்வதற்கு இவர்கள் மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் காயப்படுத்துவார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

V மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

V என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் உண்மை பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிறிய பிரச்சனையை கூட பெரியதாக நினைத்து வருத்தப்படுவார்கள். இவர்கள் அதிக நியாபக திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

W எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?  

W எழுத்தை கொண்டவர்கள் எப்பொழுதும் மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். தன்னை அறியாமலே பல சிக்கல்களில் மாற்றிக்கொள்வார்கள். எல்லா விஷயத்திற்கும் அதிகம் பயப்படுவார்கள்.

மூன்றாவது எழுத்து X என்றால்..? 

X என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் திட்டமிட்டு செயல்படுவார்கள். கெட்ட பழக்கங்கள் அதிகம் காணப்படும். இவர்கள் வாழ்வில் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள்.

Y மூன்றாவது எழுத்தாக இருந்தால்..? 

Y மூன்றாவது எழுத்தாக இருந்தால் இவர்கள் வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னுடைய சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். மற்றவர்களிடம் எளிதில் பேச விரும்பமாட்டார்கள்.

Z எழுத்தை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..?  

Z என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் வலிமையானவர்களாக இருப்பார்கள். நினைத்த வேலையை எளிதில் முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். நம்பிக்கை இவர்களிடம் அதிகம் காணப்படும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்