சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தை எந்தெந்த சக்தி வைத்திருக்கும் தெரியுமா? | What Happens if Baby is Born on Solar Eclipse in Tamil
ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி இத்தகைய கிரகணத்தை ஆன்மிகத்தில் கெட்ட விஷயமாக தான் பார்க்கின்றன. அப்படி சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் போது குழந்தைகள் பிறப்பித்து எந்தமாதிரியான பலன்களை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
சூரிய கிரகணம் அன்று குழந்தை பிறப்பது நல்லதா? கெட்டதா?
பொதுவாக சூரிய காரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி அனைவருக்குமே மனதில் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் தீமையான விஷயங்களுக்கு சக்திகள் அதிகரிக்கும் என்று ஆன்மிகத்தில் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 20.04.2023 அன்று சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஆக இந்த கிரகண நேரத்தில் பிறக்குடிய குழந்தைகளுக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இப்பொழுது நாம் படித்தறிவோமா.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்
வானத்தில் நிகழக்கூடிய இந்த கிரகண நிகழ்வு வானியல் நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த வானியல் நிகழ்வுகளுக்கும், ஜோதிடத்திற்கும், புராண கதைகளுக்கும் தொடர்பு அதிகமாக இருக்கு. அந்த வகையில் புராண கதைகளுக்கும், ஜோதிடத்திலும் கிரகண நேரத்தில் பிறக்கப்படும் குழந்தைகளுக்கு என்ன சொல்ராங்க அப்படின்னா.
ராகு கேது என்கின்ற பாம்பு கிரகங்கள் சூரியன் அல்லது சந்திரனை விழுங்கக்கூடிய நிகழ்வை தான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி பாம்புகள் சூரியனையே, சந்திரனையோ விழுங்கக்கூடிய நிகழ்வு ஒரு நல்ல நிகழ்வு இல்லை என்றும். இது நல்ல காலம், நல்ல நேரம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் ஜாதகத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது கிரகண கால நேரத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு ராகு, கேது, சனி போன்றவை பாவக்கிரகங்கள் வலிமைபெற்றிருக்குமாம். இவ்வாறு வலிமை பெற்றிருக்கும் இந்த கிரகங்கள் சேர்க்கையால் அந்த குழந்தை ஒரு தலைவனாகவோ, இல்லையென்றால் தேவையற்ற சகவாசங்கள் ஏற்பட்டால் பயங்கரமான வில்லனாக அந்த குழந்தை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும் போது ஓரைக்குடிய குழந்தைகளுக்கு கிரகணம் தோஷம் ஏற்படும். சூரியன் சந்திரன் ராகு ஒரே வீட்டில் இருக்கும் போது கேது நேர் எதிரில் வீட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம் என்று சொல்றாங்க. அதேபோல் சூரியன் கேது ஒரே வீட்டிலும் ராகு, சந்திரன் நேர் எதிரில் வீட்டில் இருப்பது சந்திர கிரகணம் தோஷத்தை ஏற்படுத்துமாம்.
இத்தகைய கிரகணம் தோஷம் அந்த குழந்தையை விட அந்த குழந்தையின் பெற்றோர்களை தான் அதிகமாக பாதிக்குமாம்.
சூரிய கிரகணத்தின் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் தந்தியின் மற்றும் பொருளாதார நிலையை பாதிக்கும் இடமாக அமைந்திருக்கும். தந்தை வழியில் வரக்கூடிய பூர்விக சொத்தில் அதிகளவு சிக்கல்களை ஏற்படுத்துமாம்.
சூரிய கிரகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகணம் தோஷம் ஏற்பட்டால் பிற்காலத்தில் அந்த குழந்தைக்கும், குழந்தையின் தந்தைக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகமாக இருக்குமாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அட்சய திருதியை அன்று தங்கத்தை இந்த நேரத்தில் வாங்குங்கள் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பெருகும்..!
கிரகணம் என்பது அணுசக்தி போன்றது ஆக அதனை நல்லதிற்கும் பயன்படுத்தலாம், கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். ஆக கிரகணம் நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் இருக்கும் அதனை நல்லவழியில் பயன்படுத்துவதும், தீயவழியில் பயன்படுத்துவதும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உங்கள் கைகளில் தான் உள்ளது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |