சித்ரா பௌர்ணமி என்றால் என்ன.? | What is Chitra Pournami in Tamil

Advertisement

What is Chitra Pournami in Tamil

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாப்படுகிறது. ஒரு சில ஊர்களில் சித்ரா பௌர்ணமி திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் அல்லது 5 நாட்கள்அல்லது 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா எதற்கு இவ்வளவு சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா.? அப்படி தெரியவில்லை என்றால் வாருங்கள் இப்பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது. ஆகையால், அன்றைய தினம் பற்றி நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும்.

சித்ரா பௌர்ணமி என்றால் என்ன.?

சித்ரா பௌர்ணமி என்றால் என்ன

சித்ரா பௌர்ணமி என்பது, சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்களால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். சித்ரா பௌர்ணமி விழா, எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும், சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாப்படுகிறது. அதாவது, இந்நாளில் சித்திர குப்தர் தாம் செய்யும் பாவ கணக்குகளை குறைத்து தாம் செய்யும் புண்ணியங்களை அதிகமாக்குவர் சைவர்களின் நம்பிக்கை ஆகும்.

எனவே, சித்ரா பௌர்ணமி என்பது எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும், சித்திர குப்தருக்காக கொண்டாடப்படும் விழாவாகும். அதுமட்டுமில்லாமல், இந்நாளை சித்திர குப்தர் பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி சிறப்பு

பொதுவாக மனிதனாக பிறந்த  அனைவருமே நம் அணைத்து பிறப்பிக்கும் செய்யும் பாவ புண்ணியங்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி. எனவே, எம லோகத்தில் நமது பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர் அவதரித்த நாளான சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தர் வழிபடுவதன் மூலம் நம் எண்ணத்தில் பாவம் செய்யும் குணம் நீக்கி புண்ணியம் செய்யும் குணம் அதிகரிக்கும்.

அதுமட்டுமில்லாமல்,  சித்திரகுப்தன் கேது என்ற கிரகத்திற்கு உரிய கடவுள் ஆவர். சர்க்கரை பொங்கல், இளநீர், அப்பம் மோர், பானகம் போன்ற உணவுப்பொருட்களை நிவேதனம் செய்து வழிபட வேண்டும்.

மேலும், இந்நாளில் அம்பாள் வழிபாடு, பௌர்ணமி வழிபாடு மற்றும் தானம் செய்தல் போன்றவை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபட வேண்டும்.

சித்ரா பெளர்ணமி அன்று இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் பணக்கஷ்டமே ஏற்படாது

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement