What is Lucky Signs August Month
நாம் எப்போதும் ஒரு வார முதலில் அல்லது மாதத்தின் முதலில் ராசிபலன்களை தெரிந்துக்கொள்வோம். அதாவது நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று நாம் தெரிந்துகொள்வதில் தனி நேரத்தினை ஒதுக்குவோம். அவ்வாறு பார்த்தால் நாளை ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி பிறக்கிறது. அதனால் ஆகஸ்ட் மாதத்தில் ஒவ்வொரு கிரகமும் அதனுடைய ராசியினை மாற்றுகிறது. இப்படி கிரகத்தினை மாற்றுவதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும், சில ராசிகளுக்கு நடுநிலையான பலன்களையும் அளிக்கிறது. ஆகவே இவ்வாறு கிரக மாற்றங்கள் நிகழ்வதால் ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிகளுக்கு மட்டும் அமோகமான பலன்கள் கிடைக்கப்போகிறது. ஆகையால் அது எந்தந்த ராசிகளுக்கு என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023:
சிம்மம் ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆனது மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும் விதமாக உள்ளது. இதுனால வரையிலும் உங்களுக்கு இருந்த நிதிநிலை பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பண வரவு மேலோங்கி காணப்படும்.
அதேபோல் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இந்த மாதத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருந்தாலும் கூட அவை யாவும் சுப நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே இருக்கும்.
கடகம் ராசி:
ராசியில் நான்காவது ராசியாக உள்ள கடக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆனது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு மாதமாக காணப்படுகிறது. அதனால் இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருந்த சொத்து விவகாரங்கள் தீர்வுக்கு வரும். மேலும் பொருளாதார நிலை மற்றும் மகிழ்ச்சி ஆனது சிறப்பானதாக காணப்படும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
மிதுனம் ராசி:
12 ராசிகளில் 3-வது ராசியாக இருப்பது தான் மிதுன ராசி. இத்தகைய ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஆரம்பம் கொஞ்சம் நடுநிலையுடன் இருந்தாலும் கூட அதன் பிறகு நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அதுமட்டும் இல்லாமல் இதுநாள் வரையிலும் காணப்பட்ட பொருளாதார சிக்கல் மற்றும் கடன் பிரச்சனை நல்ல பலனை அளிக்கும் விதமாக முடிவுக்கு வரும். நிதிநிலை சிறப்பானதாக காணப்படும். மேலும் குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும்.
தனுசு ராசி:
வில் போன்ற அமைப்பினை கொண்டுள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் இல்லாத மகிழ்ச்சியன வாழ்க்கையாக ஆகஸ்ட் மாதம் அமையும். ஆனால் செய்யும் செயலில் பொறுமை மற்றும் நிதானம் அவசியம்.
அதேபோல் அலுவகத்தில் உங்களுக்கான பாராட்டும், ஊதிய உயர்வும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குடும்பத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியானதாக அமையும்.
இந்த ஆண் ராசிக்காரர்கள் திருமணத்திற்கு பிறகு செல்வ வளம் அதிகரிக்கும் உங்க ராசி இருக்கா
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |