பல்லி கத்தும் முறை மற்றும் அவற்றின் பலன்கள் | Lizard Noise Meaning Subliminal in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பல்லி கத்தும் முறை மற்றும் அவற்றின் பலன்கள் (What is the Benefit of How Many Times the Lizard Screams in Tamil) பற்றி விவரித்துள்ளோம். பொதுவாக வீட்டில் சில சமயங்களில் பல்லி சத்தம் போட்டுக்கொன்டே இருக்கும். குறிப்பாக, நாம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும் போதும் அல்லது மனதில் ஏதேனும் நினைத்து கொண்டிருக்கும் போதும் பல்லி சத்தம் இடும். இவ்வாறாக சத்தம் இட்டால் நல்லது என்றும் சில சமயங்களில் கெட்டது என்றும் கூறுவார்கள்.
அதிலும் குறிப்பாக பல்லி 1 முறை கத்தினால் ஒரு பலன், 2 முறை கத்தினால் ஒரு பலன் என பல்லி கத்தும் முறையை வைத்து ஒவ்வொரு பலன்கள் கூறப்படுகிறது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் பல்லி எத்தனை முறை கத்தினால் என்ன பலன்.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
எந்தெந்த கிழமையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்..!
பல்லி எத்தனை முறை கத்தினால் என்ன பலன்.?
1 முறை:
பல்லி ஒருமுறை கத்தினால் கஷ்டங்கள், துன்பங்கள் போன்றவை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
2 முறை:
பல்லி இரண்டு முறை கத்தினால் வீட்டில் பணவரவு, அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.
3 முறை:
உங்கள் வீட்டில் பல்லி மூன்று முறை கத்தினால் மரண ஆபத்து அல்லது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
4 முறை:
வீட்டில் பல்லி 4 முறை கத்தினால் சௌபாக்கியம் உண்டாகும் என்பதை உணர்த்துகிறது. சௌபாக்கியம் என்பது சிறந்த செல்வம் என்னும் பொருள் கொண்டது. எனவே, உங்களுக்கு அணைத்து வகையிலும் செல்வம் உண்டாகும் மட்டும் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதை உணர்த்துகிறது.
அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?
5 முறை:
பல்லி ஐந்து முறை கத்தினால் வீட்டிற்கு உறவினர்கள் அல்லது பிடித்தவர்கள் வரப்போகிறார்கள் என்பதை குறிக்கிறது.
6 முறை:
பல்லி 6 முறை கத்தினால் தீங்குயிர் அல்லது பீடை ஏற்படும் என்பது அர்த்தம் ஆகும். மற்றவர்களால் உங்களுக்கு தீங்கு ஏற்பட போகிறது என்பதை உணர்த்துகிறது.
7 அல்லது அதற்கு மேல் கத்தினால்:
பள்ளி 7 அல்லது அதற்கு மேல் கத்தினால் நிறைவு உண்டாகும் என்பதை உணர்த்துகிறது.
வீட்டில் ஒரே பல்லி தொல்லையா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க ஒரு பல்லி கூட வராது..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |