அட்சய திருதியை அன்று பல்லி | What is The Benefit of Seeing a Lizard on Akshaya Tritiya in Tamil
ஆன்மீகக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அட்சய திருதியை அன்று பல்லி பார்த்தல் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று தெரியும். தங்கம் மட்டுமின்றி இந்நாளில் நாம் என்ன வாங்குகிறமோ அது இருமடங்காக பெருகும் என்பது ஐதீகம். அட்சய திருதியை என்பது சூரிய பகவான் தனது உச்ச ராசியான மேஷ ராசியிலும், சந்திரனின் உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளாகும்.
அட்சய திருதியை நாள் மே 10 ஆம் தேதி 2024 வருகிறது. அதாவது மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை 4.17 மணிக்கு தொடங்கி மே 11-ம் தேதி 2. 50-க்கு முடிவடைகிறது. இந்நாளில் தங்கம் வாங்குவதை தவிர்த்து வீட்டில் உள்ள பல்லியை பார்த்தால் பல்வேறு நன்மைகள் நடக்குமாம். எனவே, இப்பதிவின் வாயிலாக அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம்..
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்.? என்ன செய்ய கூடாது.?
அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் என்ன நடக்கும்.?
அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏழு ஜென்மங்கள் பாவங்கள் அனைத்தும் விலகி பிடித்த தரித்திரம் அனைத்தும் விலகி விடும்.
அட்சய திருதியை நாளில் வீட்டிலுள்ள பல்லிகள் அனைத்தும் யார் கண்ணிலும் தென்படாமல் இருக்க வேண்டும் என்பது வாஸ்து பகவான் கட்டளையிட்ட நாளாகவும் கூறுவார்கள். ஒரு சிலர் பல்லியை வழிபடவும் செய்வார்கள். இந்த அட்சய திருதியை நாளில் பல்லியை கண்டு விட்டால் எல்லா பீடைகளும் நீங்கி, திரிஜென்மம் பாவமும் நீக்கப்பெற்று அனைத்து செல்வங்களும் பெற்று லட்சமி கடாஷத்துடன் வாழ்வர் என்று நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை ஆனது சித்திரை மாத வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் நம் வீட்டில் பல்லிகள் அதிகமாக இருக்கும். ஆனால், அட்சய திருதியை நாளில் மட்டும் பல்லிகள் நம் கண்ணிலே தென்படாதாம். வாஸ்து பகவானின் கட்டளைக்கிணங்க அட்சய திருதியை அன்று மட்டும் எல்லா பல்லிகளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டிருக்குமாம். எனவே, எல்லாவிதமான துன்பங்களும் நீங்கி சகல செல்வ வளமும் பெற வேண்டுமென்றால் எப்படியாவது அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்து விடுங்கள்.
அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம்..
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |