மணப்பெண்ணை வலது காலை எடுத்து வைத்து உள்ள வா என்று கூறுவதற்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா..?

Advertisement

What is the Reason for Bride to Come Inside her Right Leg at Home in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி உங்களுக்கு கிடைக்கும். பொதுவாக நமது முன்னோர்கள் நமது வாழ்க்கையை நடத்துவதற்கு பலவகையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் வகுத்து தான் வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்து வைத்த பலவகையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் நாம் இன்றளவும் பின்பற்றி வருகின்றோம். அப்படி நாம் பின்பற்றி வரும் பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளில் ஒன்று தான் புதிதாக திருமணமான மணப்பெண் முதல் முறையாக தனது புகுந்த வீட்டிற்கும் செல்லும் பொழுது வலது காலை எடுத்து வைத்து உள்ளே வர சொல்லுவது. இப்படி சொல்லுவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..? தெரிந்தால் பரவாயில்லை தெரியாது என்றால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் காலில் மெட்டி அணியும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணக்கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்

பாதங்களின் ரகசியம்:

Why do they ask the bride to take her right leg and come inside in tamil

பொதுவாக நமது பாதங்களை மிகவும் சுத்தமாக வைத்து கொள்வது நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் நமது பொருளாதாரத்தை வளர்ச்சியடை வைக்கும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..?

ஆம் நண்பர்களே நமது பாதங்களை மிகவும் சுத்தமாக பராமரித்தால் நமது பாதத்தில் மகாலட்சுமி வாசம்செய்வாள் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நமது வலது பாதத்தில் நாராயணன் சகிதமாக அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பொதுவாக லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். அதனால் அழகா உள்ள அனைத்து இடத்திலும் மகாலட்சுமி குடியிருப்பர் என்றும் கூறப்படுகிறது. அதாவது நிறைந்து நிற்கும் நெல் வயல், சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள் மற்றும் மகிழ்ச்சியான வீடு என இயற்கை அழகு கொஞ்சும் அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி தாயார் வாழ்கிறாள்.

அதனால் இனிமேல் உங்களின் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

வலது கால் ரகசியம்:

நான் முன்னர் கூறியது போல் நமது வலது காலில் நாராயணன் சகிதமாக அன்னை மகாலட்சுமி குடியிருக்கிறார். அதனால் தான் திருமண ஆன மணப்பெண்ணை புகுந்த வீட்டிற்கு முதல் முறையாக வரும்பொழுது தலைவாயிற் படியில் 1 படி நெல்லை வைத்து அதனை அவரின் வலது காலால் வீட்டின் உள்புறம் தள்ளிவிட்டு வீட்டின் உள் வரும் பழக்கம் உள்ளது.

இதன் மூலம் மணப்பெண்ணின் வலது காலில் நாராயணன் சகிதமாக குடியிருக்கின்ற அன்னை மகாலட்சுமி நமது வீட்டிற்குள் வருவாள் என்று நம்பப்படுகிறது. இதனால் தான் புதிதாக திருமண ஆன மணப்பெண்ணை புகுந்த வீட்டிற்குள் நுழையும்பொழுது வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுகிறார்கள்.

பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

Advertisement