What Not To Do on Adi Amavasai in Tamil
பொதுவாக, நாம் அனைவரும் நம் பண்பாட்டில் உள்ள சில விஷயங்களை செய்ய தவறுகிறோம். அதாவது, நம் முன்னோர்கள் வகுத்து வைத்த சில முறைகளை கடைப்பிடிக்க தவறுகிறோம். நமக்கு வாழக்கையில் சில தீராத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அக்காலத்தில் உள்ள அனைவரும் வாழ்க்கை முறைகளை அறிந்து அதற்கேற்ற வழிகளில் வாழ்ந்தவர்கள். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு பிரச்சனைக்கான தீர்வுகளையும் சொல்லி சென்றனர். எனவே, அந்த வகையில் ஆடி முதல் அமாவசை அன்று என்ன செய்ய கூடாது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். அதனை பற்றித்தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.
ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாதவை:
இந்த வருடம் ஆடி அமாவாசை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்து கலாச்சாரத்தின் படி இந்நாள் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
- ஆடி அமாவாசை அன்று நீங்கள் பிறரிடம் கடன் வாங்கவும் கூடாது, நீங்கள் பிறருக்கு கொடுக்கவும் கூடாது. பணம் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது.
- ஆடி முதல் அமாவாசை அன்று வாசலிலும் பூஜை அறைகளிலும் கோலம் இடுதல் கூடாது. வாசலில் தண்ணீர் மட்டும் தெளித்து பெருக்கி விட வேண்டும். மறந்தும் கூட வாசலில் கோலமிடுதல் கூடாது.
- ஆடி அமாவசை அன்று, நீங்கள் உங்கள் முன்னனோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும், கட்டாயமாக காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும்.
- மேலும், அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
- முக்கியமாக, அம்மாவாசை அன்று வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது. ஏனென்றால், முன்னோர்களை வழிபாடும் நாளான அமாவாசை அன்று அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்பது ஐதீகம்.
- ஆடி அமாவாசை அன்று, காலையில் வீட்டையோ, சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்ய கூடாது.
- காலையில் நீண்ட நேரம் தூங்க கூடாது.
- முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.
- வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது.
- காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.
- முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.
- பெண்கள் தலைவிரி கோலத்துடன் இருக்க கூடாது.
- நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.
- பெண்கள் குளித்து விட்டு தான் சமைக்க தொடங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், புடவை போன்ற பாரம்பரிய உடைகள் அணிந்து சமைக்கவும் விளக்கேற்ற்றவும் செய்ய வேண்டும்.
பொதுவாக, அம்மாவாசை என்பது மறைந்த நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாளாகும். எனவே. இந்நாளில் சில விஷயங்களை நாம் செய்ய கூடாது. அமாவசை அன்று நம் முன்னோர்கள் நம் வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் வரும் வேளையில் இந்த தவறுகளை செய்ய கூடாது. அப்படி செய்தால், நம் குடும்பத்தினர் இந்நாளை நமக்கான நாளாக வழிபடவில்லை என்று நினைத்து வருத்தமுடன் செல்வார்கள். இவ்வாறு அவர்கள் வருத்தமுடன் சென்றால் நம் குடும்பம் நம் முன்னோர்களின் ஆசி இல்லாமல் பல பிரச்சனைகளை சந்திக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்புடுகிறது.
ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |