What Not to Do on Diwali in Tamil | தீபாவளி அன்று செய்ய கூடாதவை.!
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீபாவளி அன்று என்ன செய்யக்கூடாது.? (What Should You Not do on Diwali in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். தீபாவளி என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரது மனதிலும் வரும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. புது ஆடைகள், வண்ண மத்தாப்புகள், வெடிகள், இனிப்பு பலகாரங்கள் என கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. தீபாவளி அன்று நாம் கடவுளின் அருளை பெறவும், வாழ்வில் இருள் நீங்கி ஒளி வர நாம் சில விஷயங்களை கட்டாயமாக செய்ய வேண்டும். தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள்.!
கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய விஷயங்கள்.!
அதேபோல், தீபாவளி அன்று நாம் சில விஷயங்களை செய்ய கூடாது. ஆனால், அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, தீபாவளி அன்று செய்ய கூடாத செயல்கள் என்னென்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
What Should We Not Do on Diwali in Tamil:
- தீபாவளி அன்று, காலையில் 8 அல்லது 9 மணிவரை தூங்கிக்கொண்டு இருக்க கூடாது. அதிகாலையிலே எழுந்து எண்ணெய் தேய்த்து, சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். தீபாவளி அன்று தாமதமாக எழுவது வீட்டில் தரித்திரத்தை கொண்டு வரும்.
- தேவையற்ற சண்டைகள், பேச்சுவார்த்தைகள் இருக்க கூடாது.
- பிறரிடம் கோபத்துடன் நடந்துகொள்ள கூடாது.
- தீய சொற்களை பேசுதல் கூடாது.
- முக்கியமாக அசைவ உணவுகளை சாப்பிட கூடாது. அசைவ உணவுகளை சமைப்பது, சாப்பிடுவது வீட்டிற்கு பாவங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
- மேலும், மதுபானங்களை அருந்துதல் கூடாது.
- தீபாவளி அன்று கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை வாங்க கூடாது.
- இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குதல் கூடாது. இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், கண்ணாடி சம்மந்தப்பட்ட பொருட்களை வாங்குதல் கூடாது.
- வீட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானோர், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் வளர்ப்பு பிராணிகள் (ஆடு, மாடு, நாய், பூனை) இருந்தால் அதிக சத்தத்துடன் இருக்கும் வெடிகளை வெடிக்க கூடாது.
தீபாவளி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |