What Not To Do On Thursday in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து ஆன்மீக தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது வியாழக் கிழமை அன்று நாம் என்ன செய்ய கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக வியாழக் கிழமையானது ஒவ்வொரு வாரமும் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை இருப்பவர்கள் எதை செய்தாலும் அதை ஆன்மீக ரீதியாக தான் செய்வார்கள். அந்த வகையில் வியாழக் கிழமை அன்று என்ன செய்ய கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகையால் இந்த பதிவின் வாயிலாக வியாழக் கிழமை அன்று செய்யக்கூடாதவை என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
எந்த கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா
வியாழக்கிழமை அன்று செய்ய கூடாதவை:
பொதுவாக வியாழக் கிழமை என்றாலே அது குரு பகவானின் நாள் என்று சொல்லலாம். குரு அருள் நிறைந்திருக்கக் கூடிய நாளாக வியாழக்கிழமை இருக்கிறது. அதுபோல குருபகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதமாக வியாழக்கிழமை விரதம் இருக்கிறது.
இந்த வியாழக் கிழமையில் கல்வி உட்பட பல கலைகளை கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். இந்த நாளில் கலைகளை கற்று கொள்வதனால் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
ஆனால் சில காரியங்களை வியாழக் கிழமைகளில் செய்ய கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதை பற்றி தற்போது காணலாம்.
எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது..
வியாழக்கிழமையில் செய்ய கூடாதவை:
♦ பொதுவாக வியாழக் கிழமை அன்று தான் பலரும் பூஜை அறையை சுத்தம் செய்வார்கள். காரணம், மறுநாள் வெள்ளி கிழமை ஆகையால், முதல் நாளான வியாழக்கிழமை அன்று தான் பூஜையை அறையை சுத்தம் செய்வார்கள். ஆகவே பூஜை அறையை சுத்தம் செய்வது தவறு இல்லை. ஆனால் பூஜை அறையில் இருக்கும் பொருட்களை வியாழக் கிழமை அன்று சுத்தம் செய்ய கூடாது.
♦ அதுபோல நம் வீட்டில் இருக்கும் மளிகை பொருட்களை வியாழக் கிழமை அன்று சுத்தமாக துடைத்து எடுக்க கூடாது. அதாவது, மளிகை பொருட்களை வியாழக்கிழமை என்று சுத்தமாக தீர்ந்து போவது போல் செய்ய கூடாது.
♦ வியாழக்கிழமை அன்று வீட்டில் அழுக்கு துணிகளை சேர விட கூடாது. வியாழக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைப்பதால் வீட்டில் கடன் சுமை அதிகரிக்கும்.
♦ சில கலாச்சாரங்களில், வியாழக்கிழமைகளில் முடி வெட்டுவது அல்லது ஷேவிங் செய்வது துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆகையால் வியாழக் கிழமையில் முடி வெட்டுவதை தவிர்ப்பது நல்லது.
♦ வியாழக்கிழமைகளில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவது அல்லது முக்கியமான சட்ட ஆவணங்களில் கையொப்பமிடுவது போன்ற சட்ட ரீதியான செயல்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது.
♦ வியாழக்கிழமை அன்று நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதாவது நீங்கள் வியாழக்கிழமையில் வெளியில் செல்ல விரும்பினால் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கடவுளுக்கு ஆகாத பூக்கள் எது தெரியுமா..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |