Things to Buy for Varalakshmi Vratham in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் விசேஷச நாட்களில் மிகவும் முக்கியான நாள் வரலக்ஷ்மி விரதம். அன்றைய தினத்தில், லட்சுமி தேவியை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும்.
வரலக்ஷ்மி விரதம் அன்று, லட்சுமி தேவியை வழிபட்டு வீட்டிற்குள் அழைப்பார்கள். சுமங்கலி பெண்கள் வரலக்ஷ்மி விரதம் இருந்தால், சுமங்கலி பாக்கியம் கிட்டும். அதேபோல், கன்னி பெண்கள் விரதம் இருந்தால் நல்ல கணவர் அமைவார். அதுமட்டுமில்லாமல், வீட்டில் அன்பு, மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். எனவே, அன்றைய தினத்தில் வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக நாம் சில பொருட்கள் வாங்க வேண்டும். அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
What to Buy for Varalakshmi Vratham in Tamil:
பனங்கற்கண்டு:
இனிப்பான பொருட்கள் அனைத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே, மருத்துவ குணம் நிறைந்த பனங்கற்கண்டு வாங்கி வீட்டில் வைத்தால், அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் கிட்டும்.
வரலக்ஷ்மி விரதம் வாழ்த்துக்கள் 2024
குதிரை படம்:
வரலக்ஷ்மி விரதம் ஆடி வெள்ளி கடைசி வெள்ளி அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு உகந்த நாள். சுக்கிர பகவானின் வாகனம் குதிரை. எனவே, அன்றைய தினம் குதிரை சார்ந்த பொம்மைகள் அல்லது போட்டோக்கள் வாங்கி வீட்டில் வைக்கலாம். இது உங்கள் வீட்டில் சுக்கிர திசையை அதிகப்படுத்தும்.
கிழங்கு வகைகள்:
கிழங்கு வகைகளில் உங்களுக்கு எந்த விதமான கிழங்கு கிடைக்கிறதோ அதனை வரலக்ஷ்மி விரதம் அன்று வாங்கி பூஜை அறையில் வைத்து, அதன் பிறகு சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய்:
வரலக்ஷ்மி விரதம் அன்று நெல்லிக்காய் வாங்கி லட்சுமி தேவிக்கு படைத்து வழிபடுவதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும். நெல்லிக்காய் மரம் லட்சுமி தேவிக்கு உகந்தது.
தேங்காய்:
லட்சுமி தேவிக்கு தேங்காய் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, பூஜையின்போது தேங்காய் உடைப்பதை தவிர்த்து ஒரு முழு தேங்காயை வாங்கி வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
மஞ்சள் பூசணி:
மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களில் மஞ்சள் பூசணியும் ஒன்று. எனவே, வரலக்ஷ்மி விரதம் அன்று மஞ்சள் பூசணியை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
சங்கு:
வரலக்ஷ்மி விரதம் அன்று சங்கு வாங்கி வைத்து வழிபடலாம். சங்கு, லட்சு தேவியின் சகோதரன் என்று கூறப்படுகிறது. வரலக்ஷ்மி விரதம் அன்று சங்கு வாங்கி வழிபட்டு வந்தால் லட்சுமி தேவியின் ஆசியும், மகா விஷ்ணுவின் ஆசியும் கிடைக்கும். முக்கியமாக, வீட்டில் பணத்தட்டுப்பாடு வராது.
வரலட்சுமி விரதம் இருக்கும் முறை..!
தாமரை மலர்:
மஹாலஷ்மி வாசம் செய்யக்கூடிய தாமரை மலர் வாங்கி வந்து வரலக்ஷ்மி விரத நாளில் வைத்து வழிபடலாம். இதனை தவிர்த்து எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கக்கூடிய மஞ்சள், குங்குமம் மற்றும் கல் உப்பு போன்ற பொருட்களை வாங்கி வைத்து வழிபட வேண்டும்.
தானம் செய்தல்:
வரலக்ஷ்மி விரதம் அன்று, தானம் செய்தல் மிகவும் நல்லது. எனவே, உங்களால் இயன்றவற்றை இல்லாதவர்களுக்கு தானம் செய்து வாருங்கள். லட்சுமி தேவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பாள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |