ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.?

Advertisement

Aadi Amavasai What to Do in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். சூரியனும், சந்திரனும் இணையக்கூடிய நாள் தான் அமாவாசை. அன்றைய தினம் இரு கிரகங்களும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும். இதனால், இரு கிரகங்களின் ஆதர்சன சக்தி மிக அதிகமாக இருக்கும். அதனால், தான் அமாவாசை அன்று எந்தவொரு புதிய செயல்களையும், சுப காரியங்களையும் செய்தல் கூடாது.

எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடாது என்றும் கூறுவார்கள். அதேபோல், அன்றைய தினத்தில் நம் சில செயல்களை முக்கியமாக செய்ய வேண்டும்.  அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள்..!

What to Do on Aadi Amavasya in Tamil | ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.?

ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்

  • ஆடி அமாவாசை அன்று பெரியவர்களையும், இறந்த நம் முன்னோர்களையும் நினைத்து வழிபட வேண்டும்.
  • இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.
  • காலையில் 5 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து குளித்து விட வேண்டும்.
  • வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்க்கு விளக்கேற்ற வேண்டும்.
  • வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு, பூ வைத்து, பொட்டு வைத்து படையல் இட்டு வழிபட வேண்டும்.
  • அவர்களுக்கு படையல் வைத்து வணங்கி விட்டு, காக்கைக்கு உணவு வைத்து, அதன் பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும்.
  • தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் செல்ல முடியாதவரக்ள், ஆடி அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
  • அன்றைய தினத்தில் ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த தானம் தர்மங்களை செய்யலாம். பசு மாட்டிற்கு கீரையை உணவாக அளிக்கலாம்.
  • அமாவாசை அன்று இறந்த நம் முன்னோர்கள் பூமியை நோக்கி வருகிறார்கள் என்பது ஐதீகம். எனவே, அன்றைய தினத்தில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் இட்டு அவர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் அன்றைய தினம் அவர்கள் ஆத்மா வலம்வரும் என்பது ஐதீகம்.
  • அதேபோல், அன்றைய தினத்தில் குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்யலாம்.

ஆடி அமாவாசை ஏன் அவ்வளவு சிறப்பாக வழிபடுகிறார்கள் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement