What to Do on Chitra Pournami
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளோம். பௌர்ணமிகளில் அதிகம் சிறப்பு வாய்ந்தது சித்ரா பௌர்ணமி. அன்றைய நாளில், நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டும். சித்ரா பௌர்ணமி ஆனது, எம லோகத்தில் இருக்கும், சித்ரகுப்தனை வழிபட உகந்த நாள் ஆகும். எனவே, அன்றைய நாளில் சித்ரகுப்தனை வழிபட்டு தானம் தர்மங்களை வழங்குவதன் மூலம், நம் பாவங்கள் குறைக்கப்படும் என்பது நம்பிக்கை. எனவே, சித்ரா பௌர்ணமி தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சித்ரா பௌர்ணமி தேதி நேரம் மற்றும் பூஜை முறை
சித்ரா பௌர்ணமி அன்று என்ன செய்ய வேண்டும்.?
- சித்ரா பௌர்ணமி முதல் நாள் அன்றே, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் உள்ள படங்களை துடைத்து சுத்தம் செய்து, குங்குமம் மஞ்சள் இட்டு அலங்கரிக்க வேண்டும்.
- சித்ரா பௌர்ணமி அன்று, காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்க வேண்டும்.
- அன்றைய தினத்தில் அம்பாளின் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
- சித்ரா பௌர்ணமி அன்று அம்பாளை வழிபட வேண்டும். அம்பாளின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து வழிபட வேண்டும். அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.
- வீட்டில் அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைத்து விரதம் இருந்தது வழிபடுவதன் மூலம், திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யுங்கள்.
- அதேபோல், மாலையில் வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் ஏற்ற வேண்டும். மாலை பூஜையின் போது பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்ய வேண்டும். இதனை அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்க வேண்டும்.
- முடிந்தவரை இல்லாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்கள். அன்றைய தினத்தின் தானம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மேம்படும்.
- பெரும்பாலான ஊர்களில், அன்றைய தினத்தில் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். காவடி, பால்குடம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அம்மனை தரிசிக்கலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று இந்த மந்திரத்தை சொன்னால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |