நாளை சனிப்பிரதோஷத்தில் இந்த பொருளை கோயிலுக்கு வாங்கிக் கொடுத்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் வரும்..!

What To Do On Shani Pradosham in Tamil

What To Do On Shani Pradosham in Tamil

சனி பிரதோஷத்தில் நம் நந்தி பகவானையும் சிவபெருமானையும் வணங்கினால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால் சனிப்பிரதோஷத்தன்று கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்து வழிபடுவோம். அப்படி சனி பிரதோஷத்தன்று கோவிலுக்கு செல்லும் போது கோவிலுக்காக சில பொருட்களை வாங்கி கொடுங்கள். அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தால் தீர்ந்து விடும் அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதுவும் நிறைவேறும். உங்களின் கஷ்டத்தை போக்கக்கூடிய அந்த பொருட்கள் என்னவென்று இப்பதிவில் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

நார்த்தங்காய்:

பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்

சனிப்பிரதோஷத்தன்று மாலை நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் நார்த்தங்காய் சாறு அல்லது நார்த்தங்காய் வாங்கி கொடுங்கள். நார்த்தங்காய் சாறில் நீங்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது உங்களுக்கு இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்களுக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் வரும்.

அருகம்புல்:

பிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்

சனி பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு அருகம்புல் வாங்கி கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.

பிரதோஷம் வகைகள்

 

இளநீர்:

What To Do On Shani Pradosham in Tamil

சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. அதனால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு இளநீர் வாங்கி கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நீங்கும். அதாவது நீங்கள் வீடு கட்டுவதற்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் நீங்கி விடும். அதுமட்டுமில்லாமல்  நீங்கள் புது வீடு வாங்க வேண்டுமென்றாலும் அதுவும் நிறைவேறும்.

வெள்ளைத் தாமரை:

What To Do On Shani Pradosham in Tamil

சிவபெருமானுக்கு சனி பிரதோஷத்தன்று வெள்ளைத் தாமரை வாங்கி கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் அனைத்து கடன் பிரச்சனைகளும் தீர்ந்து செல்வம் பெருகும்.

இதர பொருட்கள்:

  • பசும்பால்
  • பன்னீர்
  • தேன்
  • வில்வம்
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!

 

இது போன்ற பொருட்களையும் நீங்கள் வாங்கி கொடுக்கலாம்.  இந்த பொருட்களையெல்லாம் நீங்கள் சனிப்பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். 

மேற்கூறிய பொருட்களை எல்லாம் நீங்கள் சனிப்பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் கஷ்டம் எல்லாம் நீங்கி செல்வம் பெருகும் அதுமட்டுமில்லாமல் சொந்த வீடு வாங்குவதும் நினைவாகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்