வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

விஜயதசமி அன்று என்ன செய்ய வேண்டும்.?

Updated On: September 17, 2025 4:27 PM
Follow Us:
What to Do on Vijayadashami in Tamil
---Advertisement---
Advertisement

What to Do on Vijayadashami in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விஜயதசமி அன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். விஜயதசமி நாளில் அம்பாளை நாம் வழிப்பட்டால் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். வெற்றி பெற வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் அம்பாளை வழிபட உகந்த நாள் விஜயதசமி. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக விஜயதசமி  கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை முடிந்து, 10 -வது நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது

விஜயதசமி அன்று புதிய விஷயங்களை செய்ய தொடங்கலாம். கல்வி கற்பது, தொழில் கற்றுக்கொள்வது, புதிய தொழில் தொடங்குவது இதுபோன்ற செயல்களை செய்வதன் மூலம் அதில் வெற்றி பெற முடியும். உலகை ஆட்டி படைத்த தீயவனான மகிசாசூரனை, தேவி துர்க்கையாக அவதரித்து, 9 நாட்கள் போராடி 10 ஆம் நாள் வதம் செய்தாள். அதனையே விஜயதசமியாக கொண்டாடி வருகிறோம். எனவே, விஜயதசமி அன்று எந்தவொரு செயலை தொடங்கினாலும் அது வெற்றி பெரும். ஓகே வாருங்கள் விஜயதசமி அன்று என்ன செய்ய வேண்டும்.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.

விஜயதசமி என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

விஜய தசமி என்றால் என்ன ?

விஜயம் என்றால் வெற்றி என்று பொருள்.  விஜயதசமி என்பது வெற்றி திருநாளாக கொண்டாடப்படுகிறது. நம் மனதில் உள்ள கோபம் , விரோதம் , பகை போன்ற தீய அரக்கர்களை வெற்றி கொள்வதாகும்.இந்த நாள் ராமரின் வெற்றி மற்றும் குருவின் அறிவுரை போன்ற நன்மைகளின் ‘வெற்றியை குறிக்கும் புனித நாளாகும்.

விஜயதசமி அன்று என்ன செய்ய வேண்டியவை:

விஜயதசமி அன்று என்ன செய்ய வேண்டும்

  • விஜயதசமி என்றால் வெற்றி தருகின்ற நாள் என்று அர்த்தம். எனவே, விஜயதசமி அன்று நீங்கள் எதில் எலாம் வெற்றி பெற நினைக்கிறீர்களோ அதனை அன்று செய்ய தொடங்கலாம். அதாவது, குழந்தைகளுக்கு கல்வி கற்று தருவது, கலைகள் கற்று தருவது, புதிய தொழில் கற்றுக்கொள்வது, புதிய தொழில் தொடங்குவது என இதுபோன்ற செயல்களை செய்யலாம்.
  • அதேபோல், புதிய பொருட்கள், புதிய ஆடை , தங்க நகைகள் இதுபோன்ற பொருட்களை விஜயதசமி அன்று வாங்கலாம்.
  • விஜயதசமி அன்று அன்று, அம்பாளின் படத்திற்கு/சிலைக்கு பூ பொட்டு வைத்து விளக்கேற்றி அம்பாளுக்கு உரிய மந்திரங்களை கூற வேண்டும்.
  • விஜயதசமி நாளில், அம்பாளுக்கு நெய்வேத்தியம் படைக்க வேண்டும். பாயாசம் சர்க்கரை பொங்கல், சுண்டல், பொரி, கடலை, வெற்றிலை பாக்கு, பழம் வைத்து வழிபட வேண்டும்.
  • இனிவரும் காலங்களில் தொட்டதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்றும், ஆரோக்கியம் நிலைத்து இருக்கவும் நலமான, வளமான, சந்தோஷமான வாழ்வை அளிக்க வேண்டும் என்றும் அம்பாளிடம் பிராத்தனை செய்ய வேண்டும்.
  • விஜயதசமி அன்று ராகுகாலம், எமகண்டம் நேரத்தினை தவிர்த்து மற்ற நேரங்களில் அம்பாளை வழிபடலாம்.
  • சரஸ்வதி பூஜை அன்று, பூஜை அறையில் வைத்து வழிபட்ட புத்தகங்களை, மறுநாள் விஜயதசமி அன்று எடுத்து சில வரிகள் படித்து, ஆரத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும்.
  • குழந்தைகள் புதிய கல்வி கற்பதற்கு இது உகந்த நாளாக இருக்கும்.
  • விஜய தசமி  அன்று நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் செய்யும் தொழிலை வணங்க வேண்டும்.
  • விஜய தசமி இந்தியாவில் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமி , துர்க்கை மற்றும் மகிஷாசுர வர்தினி போன்ற கடவுள்களை வழிபடுவது வழக்கமாக உள்ளது.
  • இந்த நாளில் சண்டி ஹோமம் செய்யப்படுகிறது. சண்டி ஹோமத்தில் மூன்று தெய்வத்தையும் ஒன்றாக வழிபடுவது ஆகும்.

விஜயதசமி வாழ்த்துக்கள் 2024

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now