வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க பூஜை அறையில் இந்த பொருளை வைய்யுங்க..!

Advertisement

வீட்டில் தெய்வ சக்தி

பொதுவாக வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருந்தால் தான் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் தெய்வ சக்தி நிறைந்திருக்கும் வீட்டில் துஷ்ட சக்திகள் எட்டி பார்க்காது என்று கூறுவார்கள். ஆகவே, பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு முறையாக பராமரித்து வழிபடுகிறமோ அந்த அளவிற்கு தெய்வம் நம் வீட்டிற்குள் நிறைந்து இருக்கும். எனவே நம் வீட்டில் தெய்வ சக்தி நிறைந்து இருக்க பூஜை அறையில் சில பொருட்களை கட்டாயமாக வைக்க வேண்டும். அந்த வகையில் வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க பூஜை அறையில் வைத்து வழிபட கூடிய பொருட்களை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

வீட்டில் தெய்வ சக்தி வர:

கோமாதா படம்:

பூஜை அறையில் வைக்கவேண்டிய படங்களில் முக்கியமான படம் கோமாதா. பசுமாட்டை நாம் பூஜை செய்து வணங்கும்போது தெய்வங்களின் முழு ஆசிர்வாதமும் நற்பலன்களும் கிடைக்கும். 

மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..

மண் அகல் விளக்கு:

பூஜை அறையில் நாம் எத்தனை விளக்குகள் ஏற்றி வழிபட்டாலும் கட்டாயமாக ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வழிபடுதல் வேண்டும். எனவே வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க மண் அகல் விளக்கு வழிபாடு மிகவும் அவசியம்.

வாசனை பொருட்கள்:

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க பூஜை அறையில் வாசனை பொருட்களை வைக்க வேண்டும். எனவே பூஜை செய்யும் போது வாசனை திரவியங்கள், பன்னீர் மற்றும் ஜவ்வாது போன்ற பொருட்களை வைத்து வழிபட வேண்டும்.

தண்ணீர்:

பூஜை அறையில் கட்டாயமாக இருக்க வேண்டிய பொருட்களில் முதன்மையானது தண்ணீர். தண்ணீர் இல்லாமல் எந்தவொரு பூஜையும் நிறைவு பெறாது. எனவே பூஜை அறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

கண்ணாடி:

பூஜை அறையில் கண்ணாடி வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும். குறிப்பாக நம்முடைய குலதெய்வம், பித்துருக்கள் மற்றும் நம் வீட்டில் இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் அக்கண்ணாடியில் பிரதிபலிப்பதாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

உங்கள் பூஜை அறையில் இதை மட்டும் செய்தால் போதும் செல்வம் பெருகும்..

குலதெய்வம் படம்:

வீட்டின் பூஜை அறையில் எத்தனை படங்களை வைத்து வழிபாட்டாலும் குலதெய்வ படத்தை வைத்து வழிபட்டால் அவற்றின் பலன்கள் கூடுதலாகவே கிடைக்கும். எனவே பூஜை அறையில் குலதெய்வ படத்தை வழிபடுதல் அவசியம்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நீங்கள் முறையாக பின்பற்றி வந்தால் வீட்டில் தெய்வ சக்தி நிறைந்து மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement