ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்களை தானமாக கொடுக்க மறந்து விடாதீர்கள்..!

Advertisement

ஆடி அமாவாசை அன்று தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி அமாவாசை எந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்று விவரித்துள்ளோம். ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியமான அமாவாசை நாள் ஆகும். அன்றைய தினம், நம் முன்னோர்கள் நம் குடும்பத்தில் உள்ளவர்களையும் காண்பதற்காகவும் நாம் செய்யும் வழிபாடுகள், படையல், தான , தர்மங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவும் நம்முடைய வீடு தேடி வருவார்கள்.

எனவே, நாம் ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு பிடித்த சில விதிமுறைகளை செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் முன்னோர்கள் படத்திற்கு பூ, பொட்டு வைத்து படையல் இட்டு அவர்களை நினைத்து வழிபட வேண்டும். காக்கைக்கு சாதம் வைத்து, அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.

What to Donate on Aadi Amavasya Day in Tamil:

ஆடி அமாவாசை அன்று தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள்

ஆடி அமாவாசை அன்று 5 விதமான பொருட்களை 5 பேருக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஒரு கிலோ அரிசி ஒருவருக்கு, ஒரு கிலோ பாசிப்பருப்பு ஒருவருக்கு , ஒரு கிலோ வெல்லம் ஒருவருக்கு , அரை கிலோ நெய் ஒருவருக்கு, முந்திரி,திராட்சை, ஏலக்காய் ஒருவருக்கு என ஐந்து பேருக்கு அன்றைய தினம் தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் வாழ்வில் அனைத்தும் நன்மைகளும் உண்டாகும்.  மேலும், கீழே கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் தானமாக கொடுக்கலாம்.

அன்னதானம்:

நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு, ஏழை எளிய மக்களுக்கு, சாப்பிடக்கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மேலும், தானியங்களை தானம் செய்யலாம். தானியங்களை தானம் செய்தால் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியின் அருள் கிடைத்து, உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்.?

உப்பு தானம்:

ஆடி அமாவாசை அன்று உப்பு அல்லது உப்பு கலந்த உணவுகளை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து இருக்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நிங்கும்.

எள் தானம்:

ஆடி அமாவாசை அன்று, எள் தானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எள்ளினை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். நிலம் என்பது மகா விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. இதனை தானமாக கொடுத்தால் சகல விதமான பாவங்களும் நீங்கும். முக்கியமாக, சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.

பசு தானம்:

ஆடி அமாவாசை அன்று பசு தானம் செய்வது மிகவும் நல்லது. தானங்களில் மிக உயர்ந்த தானமாக பசு தானம் கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் பசுக்களை தானமாக கொடுத்தால் பித்ருக்களின் சாபம் நீங்கும். அதுமட்டுமில்லாமல், நம்முடைய ஏழு தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

வஸ்திர தானம்:

வசதி இல்லாத மக்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு ஆடைகளை தானமாக கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் ஆடைகள் புதிய ஆடைகளாகவோ அல்லது நீங்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளாகவோ இருக்கலாம். இதனால், பல நன்மைகளை பெறலாம். முக்கியமாக ஆயுள்விருத்தி ஆகும். ஆடை தானம் செய்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம்.

நெய் தானம்:

நெய் என்பது மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இவற்றை ஆடி அமாவாசை அன்று தானமாக கொடுத்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம், நோயற்ற வாழ்வு உண்டாகும்.

ஆடி அமாவாசை ஏன் அவ்வளவு சிறப்பாக வழிபடுகிறார்கள் தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement