What To Donate on Akshaya Tritiya in Tamil
அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. எனவே அந்நாளில் தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பார்கள். ஆனால் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்குவது மட்டும் நல்லதல்ல. ஏழை எளியோருக்கு சில பொருட்களை தானமாக வழங்குவதும் நல்லது தான். அந்நாளில் இல்லாதவர்களுக்கு தானம் செய்தலும் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும். எனவே அட்சய திருதியை அன்று தானமாக கொடுக்கக்கூடிய பொருட்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
அட்சய திருதியை அன்று தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்:
குங்குமம்:
குங்குமம் என்பது மிகவும் மங்களகரமான பொருள். குங்குமம் இல்லாமல் எந்த சுப நிகழ்ச்சிகளும் இருக்காது. எனவே கணவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும், சமூகத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அட்சய திருதியை அன்று குங்குமத்தை தானமாக கொடுக்கலாம்.
இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது தெரியுமா? |
தண்ணீர்:
அட்சய திரிதியை அன்று நீரை தானமாக கொடுப்பதன் மூலம் அதிர்ஷ்டமும் மகிழ்ச்சியும் பெருகும். மேலும் அந்நாளில் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நீரை தானமாக கொடுப்பதன் மூலம் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற உதவும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
பால் மற்றும் பால் கலந்த பொருட்கள்:
பால் அல்லது பால் கலந்த பொருட்களை அட்சய திரிதியை அன்று தானமாக கொடுப்பதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்து அதிர்ஷ்டம் வந்து சேரும்.
பார்லி:
பார்லி என்பது மிகவும் பழமையான பொருளாக கருதப்படுகிறது. எனவே பல்வேறு பூஜைகள் செய்யும் போது ஓம குண்டலங்களில் பார்லியை பயன்படுத்துவார்கள். இவ்வாறு மதிப்பு மிக்க இந்த பார்லியை அட்சய திருதியை அன்று தானமாக வழங்குவது மிகவும் நல்லது.
ஆடைகள்:
பொதுவாகவே இந்து மாதத்தில் பலபேர் ஆடைகளை தானமாக வழங்குவார்கள். இது மிகவும் சிறப்பான ஒன்று. எனவே அட்சய திருதியை அன்று ஆடைகளை தானமாக வழங்குவது கடவுள் ஆசியை பெற உதவும் என்று நம்பப்படுகிறது.
வெற்றிலை பாக்கு:
வெற்றிலை பாக்கு இந்து மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அட்சய திருதியை அன்று பிராமணர்களுக்கு தானமாக வழங்குவது வீட்டில் அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் வழங்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை அன்று மறந்தும் இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..! |
சந்தனம்:
சந்தனம் என்பது மங்களராகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. எனவே சந்தனத்தை அட்சய திருதியை அன்று தானமாக கொடுப்பதன் மூலம் செல்வ செழிப்பை தருவதோடு ஆரோக்கியமான வாழ்க்கையையும் தருகிறது.
வெல்லம், நெய் மற்றும் உப்பு:
அட்சய திருதியை அன்று வெல்லம், நெய் மற்றும் உப்பு மூன்று பொருட்களையும் ஏழை மக்களுக்கு தானமாக வழங்கினால் மிகவும் நல்லது.
தேங்காய்:
அட்சய திருதியை அன்று யார் ஒருவர் தேங்காயை தானமாக கொடுக்கிறார்களோ அவர்கள் தலைமுறையில் ஏழு தலைமுறையினர்கள் நரகத்தில் இருந்தும், பாவத்தில் இருந்தும் விடைபெற்று கொள்ளலாம்.
நீர்மோர்:
அட்சய திருதியை அன்று நீர்மோரை தானமாக வழங்கினால் கல்வியில் சிறந்து விளங்க முடியும். அதுமட்டுமில்லாமல் வளர்ச்சிக்கான பாதையாக இருக்க கூடும்.
காலணி:
காலணிகளை ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் நரகத்தில் இருந்து விடைபெற்று கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் செருப்பு என்பது சனிபகவானுக்கு உரிய பொருளாக இருக்கிறது அதனால் சனி பகவானால் வரும் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
வீடே இல்லாதவர்களுக்கு பாய் மற்றும் போர்வை போன்றவை தானமாக வழங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் இருந்து கொண்டே இருக்கும்.
அட்சய திருதியை அன்று உடைகளை தானமாக வழங்குவதன் மூலம் தானமாக கொடுத்தவரின் ஆயுள் ஆனது நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |