சஷ்டி விரதம் உணவு முறை
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் என்ன சாப்பிடலாம் என்பதை கொடுத்துள்ளோம். முருகர் பக்தர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதத்திற்காகத் தான். வேண்டிய வரத்தினை அருளும் 7 நாட்கள் வரும் சஷ்டி விரதத்திற்காக பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சஷ்டி விரதம் தொடங்கியுள்ளது. இந்நாளில் பட்டினி விரதம் இருக்க முடியாதவர்கள் குறைந்த அளவில் உணவுகளை எடுத்து கொண்டு விரதம் இருக்கலாம்.
விரதம் இருக்கும் பலருக்கும் சஷ்டி விரதம் இருக்கும் போது என்ன சாப்பிடலாம்.? என்ற குழப்பம் இருக்கும். எனவே, நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் கந்த சஷ்டி விரத நாட்களில் எப்படியெல்லாம் விரதம் இருக்கலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கந்த சஷ்டி விரதம் இருக்கலாமா.? இருக்கக்கூடாதா.?
சஷ்டி விரதம் இருக்கும் போது என்ன சாப்பிடலாம்.?
- விரதம் இருப்பவர்கள் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்றவாறு, உணவினை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.
- உடல்நிலை சரியில்லாதவர்கள் அல்லது ஒரு வேளை உணவை தவிர்த்தால் கூட மயக்கம் வரும் என்ற உடல்நிலையில் இருப்பவர்கள் குறைவான அளவில் சைவ உணவுகளை எடுத்துக்கொண்டு அதற்கேற்றவாறு
- ஒரு வேளை உணவு சாப்பிட்டு இரண்டு வேளை உண்ணாமல் இருக்கலாம்.
- இரண்டு வேளை உணவு சாப்பிட்டு ஒரு வேளை உண்ணாமல் இருக்கலாம்.
- மூன்று வேளையும் விரதம் இருக்க நினைப்பவர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்த பாலினையும் பழங்களையும் உணவாக உண்டு விரதம் இருக்கலாம்.
- 7 நாட்களும் வெறும் இளநீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம்.
- சிலர் மிளகு விரதம் இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு மிளகினை அதிகப்படுத்தி சாப்பிட வேண்டும். முதல் நாள் ஒரு மிளகு சாப்பிட்டீர்கள் என்றால், இரண்டாவது நாள் இரண்டு மிளகு சாப்பிட வேண்டும். இதுபோல் ஒவ்வொரு நாளும் ஒரு மிளகினை அதிகப்படுத்தி சாப்பிட வேண்டும். விரதத்தில் கடுமையான விரதம் இந்த மிளகு விரதம் தான்.
- அரிசி, பருப்பு போன்றவற்றை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உணவாக எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள்.
- உப்பில்லாமல், தயிர் சாதம் மற்றும் பால் சாதம் போன்றவற்றை ஒரு வேளை அல்லது இரண்டு வேளை உணவாக எடுத்துக்கொண்டு விரதம் இருப்பார்கள்.
- மற்ற நாட்களை விட சஷ்டி விரதம் நாட்களில் அதிக தண்ணீரை அருந்த வேண்டும்.
கந்த சஷ்டி விரதம் 7 நாட்களும் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |