கேது பகவான் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரவுங்க வீட்டில தான் அடமழை..

Advertisement

When Ketu Transits Leo 2025 4 Zodiac Signs Will Become Kings in Tamil | கேது சிம்ம பெயர்ச்சி 

பொதுவாக கிரகங்கள் பெயர்ச்சி அடையும் போது எல்லா ராசிகளுக்கும் மட்டும் நன்மை மற்றும் தீமையி கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மட்டும் நன்மையை அள்ளி தரும். கிரகங்களின் ஒன்றான கேது பகவான் முக்கிய கிரகமாக இருக்கிறார். இவர் தன் நிலையிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியினால் எல்லா ராசிகளுக்கும் நன்மையை கொடுத்தாலும் 4 ராசிகள் மட்டும் செல்வந்தராக வாழ போகிறார்கள். அவர்கள் யார் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

கன்னி:

கேது சிம்ம பெயர்ச்சி 

கன்னி ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி ஆனது எல்லா விதத்திலும் சாதகமான பலன்களை கொடுக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏதும் சட்ட பிரச்சனை இருந்தால் அவை தீர்விற்கு வரும். அது போல கடன் இருந்தாலும் அதனை முடிப்பதற்கு இந்த நேரம் ரொம்ப உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த காலம் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக காணப்படுவார்கள். குடும்பத்தில் பணவரவு அதிகமாக காணப்படும். இதனை நீங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.

சுக்கிர வக்ர பெயர்ச்சியால் 3 மாசத்துக்கு இந்த ராசிக்காரர்களை கையிலேயே புடிக்க முடியாது

கடகம்:
கேது சிம்ம பெயர்ச்சி 

கடக ராசிகாரர்களுக்கு கேது பகவானின் பெயர்ச்சியானது உங்களின் வாழ்க்கையில் எல்லா செயல்களிலும் வெற்றியை தர போகிறது. உங்களின் எல்லா செயல்களுக்கும் உங்களின் தொப்புள் கொடி உறவானது பக்க பலமாக இருப்பார்கள். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏதேனும் தொழிலில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த நேரத்தில் முதலீடு செய்யுங்கள். இந்த காலம் உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கும். உங்களுக்கு வெற்றியை தர கூடியதாக இருக்கும்.

மிதுனம்:

கேது சிம்ம பெயர்ச்சி 2025

மிதுன ராசிக்காரர்களுக்கு கேது மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த காலம் நீங்கள் ரொம்ப தைரியமாக இருப்பீர்கள். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் அவரகளின் திறமையை வெளிப்படுத்துவார்கள். இதனால் சக பணியாளர்கள் மதிப்பார்கள். மேலும் பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மகிகரமும் அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் இதுவரை ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த காலம் உங்களுக்கு அதிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மறக்க முடியாத நினைவுகள் இருக்கும். இவை உங்களுக்கும், உங்களின் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மேஷம்:

கேது சிம்ம பெயர்ச்சி 2025

மேஷ ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் பெயர்ச்சியானது எல்லா செயல்களிலும் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க கூடியதாக இருக்கும். நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் செய்ய கூடியவர்களாக இருந்தால் உங்களுக்கு வெற்றியை தர கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு லாபம் அதிகமாக காணப்படும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் புதிதாக வேலை அல்லது ஏதோ ஒரு செயல் தொடங்க போகிறீர்கள் 4என்றால் இந்த காலம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எந்த செயலையும் கஷ்டம் இருந்தாலும் அதனை செய்வதன் மூலம் நீங்கள் வெற்றியை அடைவீர்கள்.

உங்க வீட்டு கதவை திறந்து வைங்க அதிர்ஷ்டம் வர போகிறது.. யார் யாருக்கு தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement